தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்- பகுதி 1
செய்தி முன்னோட்டம்
தென் இந்தியாவில் கடற்கரைகள் முதல் பசுமையான தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், ரம்மியமான கோயில்கள் வரை விடுமுறையை உற்சாகமாக செலவிட பல இடங்கள் உள்ளன. அவற்றை பற்றி ஒரு குறிப்பு!
ஆலப்பி: ஆலப்பி என்று அழைக்கப்படும் ஆலப்புழா கேரளாவில், குறிப்பாக குளிர்காலத்தில் பார்க்கவேண்டிய சுற்றுலா தலமாகும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆலப்புழாவுக்கு பயணிக்க சிறந்த பருவமாகும்.
ஆலப்புழாவுக்கு எப்படிப் பயணிப்பது: ரயில் அல்லது விமானம் மூலம் கொச்சி சென்று, ஆலப்புழாவுக்கு பஸ் அல்லது கேப் மூலம் பயணிக்கலாம்.
கூர்க்: கர்நாடக மாநிலத்தில் கூர்க் அமைந்துள்ளது. கூர்க்கில் காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆறுகள், பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன இடம். அக்டோபர் முதல் மார்ச் வரை கூர்க்கை சுற்றிப் பார்க்கலாம்.
Travel
கண்டிப்பாக பயணிக்க வேண்டிய 3 இடங்கள்
கூர்க்கிற்கு எப்படி பயணிப்பது: கூர்க்கிற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் மங்களூர் விமான நிலையம் மற்றும் நகரத்திற்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையம் மைசூர் ரயில் நிலையம் ஆகும். இவை இரண்டும் முறையே 135 மற்றும் 120 கிமீ தொலைவில் உள்ளன. கூர்க் செல்ல, கேப் அல்லது பஸ் பயன்படுத்தி இடத்தை அடையாளம்.
கபினி: இந்தியாவின் அரிதான வனவிலங்கு காப்பகங்களில் ஒன்று கபினி. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கபினிக்கு பயணிக்க சிறந்த பருவமாகும்.
கபினிக்கு எப்படிப் பயணிப்பது: மைசூர் விமான நிலையம் கபினியிலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும், 70 கிலோமீட்டர் தொலைவில் இரயில் நிலையங்கள் ஆகும். அங்கிருந்து பஸ் அல்லது கேப் மூலம் கபினிக்கு பயணிக்கலாம்.