இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா?
ஸ்கூல், காலேஜ் லீவு விட்டாச்சு..எங்கயாச்சும் டூர் போகலாமா என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அடிக்கலாமே ஒரு விசிட்! அங்கும் பண்டைய கால வரலாற்று எச்சங்கள் முதல், அழகிய கடற்கரைகள் வரை பல டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் உள்ளது. ஆந்திராவில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ: கோனசீமா டெல்டா: ஆந்திராவின் கிழக்கு பகுதியில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கோனசீமா டெல்டா. இயற்கை எழில்கொஞ்சும் இந்த இடம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைகள் மற்றும் இயற்கை வளத்திற்கு பிரசித்தி பெற்ற இடம் ஆகும். பெயருக்கு ஏற்றார் போல, இங்கு நீர்வளம் அதிகம் உண்டு. அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று இயற்கையோடு பொழுதை களிக்கலாம்.
இயற்கை வளம் நிறைந்த அரக்கு பள்ளத்தாக்கு
அரக்கு பள்ளத்தாக்கு: விசாகபட்டினத்தில் அமைந்துள்ள மலை பள்ளத்தாக்கு, இந்த அரக்கு வேலி. பசுமையான மலைகள், அதனூடே காபி தோட்டங்கள், குளுமையான வானிலை கொண்டது இந்த பள்ளத்தாக்கு. இங்கு ட்ரெக்கிங் வசதியும் உண்டு. அதோடு இந்த மலைப்பகுதியில், வெள்ளி நீர்வீழ்ச்சிகளும் உண்டு. போரா குகைகள்: இதுவும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் உள்ளது. அங்குள்ள அனந்தகிரி மலையில், இந்த போரா குகைகள் அமைந்துள்ளன. இவை சுண்ணாம்பு குகைகளாகும். இந்த குகைகளுக்கு அருகே ட்ரெக்கிங் மற்றும் மலையேற்றமும் செய்யலாம். திருப்பதி: உலக பிரசித்தி பெற்ற இந்த பெருமாள் கோவில், ஹிந்து மதத்தவருக்கு புண்ணிய ஷேத்திரம் ஆகும். ஆனால் இங்கே, கூட்டத்தை தவிர்க்க, முன்கூட்டியே தரிசன டிக்கெட் வாங்கிக்கொள்வது நல்லது.