Page Loader
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: மும்பை பதிப்பு! 
பிரபல தெரு உணவுகளின் பட்டியல்

இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: மும்பை பதிப்பு! 

எழுதியவர் Arul Jothe
Jun 05, 2023
12:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவும் தனித்தனி சிறப்புகளை கொண்டது. ஏற்கனவே டெல்லியில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இன்று மும்பையின் பிரபல தெரு உணவுகள் என்னென்ன உள்ளது என்பதை காணலாம். பாம்பே சாண்ட்விச்: பாம்பே சாண்ட்விச் எதில் தயாரிக்கப்படுகிறது என்பதை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இது வெறும் அடிப்படையாக பயன்படுத்தப்படும் சமையலறை பொருட்களால் செய்யப்படுகிறது. வெள்ளரி, வெங்காயம் மற்றும் தக்காளி போன்றவை அடுக்குகளாக ஒரு பிரட்டின் மேல் பரப்பப்படுகின்றன. அதில் வண்ணமயமான சிவப்பு, வெள்ளை, பச்சை நிற சட்னி சேர்க்கப்படுகிறது. அதன் பிறகு, சாண்ட்விச் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யப்படுகிறது.

Mumbai Street Foods 

மும்பை தெரு உணவுகள்

பேல் பூரி: மும்பையில் மற்றொரு பிரபலமான சிற்றுண்டி பேல் பூரி. இந்த சிற்றுண்டி, பொரி, ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், மசாலா, சட்னி மற்றும் மொறுமொறுப்பான பூரி துண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது மலிவு விலை சிற்றுண்டியாகும். அதே போல இதன் செய்முறையும் மிக சுலபம். வடா பாவ்: மும்பை வாசிகளின் விருப்பமான தெரு உணவுகளில் ஒன்று வடா பாவ். மிருதுவான உருளைக்கிழங்கு போண்டா, காரமான பூண்டு-புதினா -வேர்க்கடலை சட்னியுடன் தயாரிக்கப்படுகிறது. மேலும் வெண்ணெய் தடவிய பாவ் பன்களின் இடையே வைத்து தருகிறார்கள். இதனை மும்பைவாசிகள் அதிகம் விரும்புகிறார்கள்.