நவராத்திரி ஸ்பெஷல்: விரதத்தை முடித்து கொள்வதற்கு ஏற்ற பானங்கள்
நவராத்திரின் பூஜைகள் இன்று இரவுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நவராத்திரி விரதத்தை முடித்து கொல்வதற்கு ஏற்ற பானங்களை இப்போது பார்க்கலாம். விரத நாட்களில் சரியான ஊட்டச்சத்துகளும் நீர்சத்துகளும் இருக்கும் உணவை சிலர் எடுத்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் விரத நாட்களிலும், விரதத்தை முடிக்கும் போதும் கீழ் வரும் சத்தான பானங்களை குடிப்பது நல்லது. இளநீர் இளநீர் என்பது நீர்ச்சத்து நிறைந்த ஒரு சிறந்த குளிர் பானமாகும். கோடை காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்தில் வேண்டுமாலும் இந்த பானத்தை குடிக்கலாம். இது உடலுக்கு சக்தி அளிப்பதுடன், சருமம், வயிறு மற்றும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்.
கற்றாழை ஜூஸ்
கொஞ்சம் கசப்பு நிறைய நன்மை கொண்ட கற்றாழை, நீர்ச்சத்து நிறைந்த ஒரு தாவரமாகும். அதுபோக, இதில் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற உடலுக்கு தேவையான பொருட்களும் நிறைய உள்ளன. எனவே, விரத காலங்களில் கற்றாழை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. மாதுளை/வாழைப்பழ ஜூஸ் மாதுளை, வாழைப்பழம், அன்னாசி போன்ற பழங்களில் செய்த ஜூஸ் அல்லது ஸ்மூத்திகளை விரத காலங்களில் குடிப்பது அல்சர் போன்ற உடல்நல கோளாறு வராமல் பார்த்து கொள்ளும். ரோஸ் மில்க்/பாதாம் மில்க் பொதுவாகவே பால் குடிப்பது உடலுக்கு நீர்ச்சத்து அளிப்பதுடன், எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தையும் வழங்கும். அதனால், ரோஸ் மில்க், பாதாம் மில்க் போன்ற பானங்களை குடிப்பது உகந்தது. எனினும், காபி, டீ போன்ற பானங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும்.