உயரும் வெப்பநிலைகளினால் ஏற்படும் வெப்ப அழுத்தம் என்றால் என்ன?
வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில், சைலன்ட் கில்லரான, ஹீட் ஸ்ட்ரெஸ் அல்லது வெப்ப அழுத்தம் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். உடலின் இயற்கையான குளிரூட்டும் அமைப்புகள் அதிகமாக வேலை பார்க்க நேரும்போது வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. இது தலைச்சுற்றல், தலைவலி முதல் உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்பு வரையிலான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. உடலின் உள் தெர்மோஸ்டாட்டில் கோளாறை ஏற்படுத்தும், அதீத வெப்பநிலையில் நீண்ட நேரமாக வெளிப்படுதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் இது ஏற்படுகிறது.
வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
கைக்குழந்தைகள், முதியவர்கள், உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் வெளியில் வெயிலில் வேலை செய்பவர்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். கான்கிரீட் கூட்டத்திற்குள் வசிக்கும் நகர்வாசிகளும் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். உண்மையான எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்றாலும், WMO மதிப்பிட்டுள்ளபடி, ஆண்டுதோறும் வெப்பத்தினால் சுமார் அரை மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் இறக்கின்றனர். காலநிலை மாற்றம் வெப்ப அலைகளை நீண்டதாகவும், வலுவாகவும் ஆக்குவதால், உலகம் முழுவதும் உள்ள மக்களின் உடல் சகிப்புத்தன்மையின் வரம்புகளை சோதிக்கும் நிலைமைகளுக்கு தள்ளப்படுகிறது.
வெப்ப அழுத்தம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?
வெப்ப அழுத்தத்தை அளவிட பல வழிகள் உள்ளன. அவற்றில் சில பல தசாப்தங்களாக பழமையானவை. பழமையான முறைகளில் ஒன்று வெட்-பல்ப் வெப்பநிலை என அழைக்கப்படுகிறது. இது தெர்மோமீட்டரின் மூலம், மிகவும் தீவிரமானதாகத் தோன்றாத சூழ்நிலைகளில், பயன்படுத்தப்படுவதாகும். மற்றொன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பாளரான கோபர்நிகஸ், யுனிவர்சல் தெர்மல் க்ளைமேட் இன்டெக்ஸ் (UTCI) ஐப் பயன்படுத்துகிறது. இது வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆனால் காற்று, சூரிய ஒளி மற்றும் கதிர்வீச்சு வெப்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மிதமான நிலையிலிருந்து தீவிரமான வெப்ப அழுத்த நிலைகளை மதிப்பிடுகிறது. மற்றொன்று, அமெரிக்க தேசிய வானிலை சேவையால் பயன்படுத்தப்படும் வெப்பக் குறியீடு, நிழலில் உள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில் "வெளிப்படையான வெப்பநிலையை" வழங்குகிறது.