Page Loader
பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள் 
பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் உடற்பயிற்சி ரகசியங்கள்

பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 05, 2023
04:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் விளையாட்டு மங்கை, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது சாதனைகள், அவரது அபாரமான உழைப்பு மற்றும் பயிற்சியின் விளைவு மட்டுமல்ல, அவள் ஆரோக்கியமான உடலமைப்பு மற்றும் வொர்க்அவுட்டையும் கூட. அவரின் பிறந்தநாளான இன்று, அவரது உடற்பயிற்சி மற்றும் உணவு ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள். சிந்துவின் உடற்பயிற்சி அட்டவணை, அவரின் போட்டிகள் துவங்கும் ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளது. சிந்து தயாராகும் போட்டியைப் பொறுத்து, சிந்துவின் வொர்க்அவுட் முறை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த வொர்க்அவுட்டில், குறிப்பாக, அவளது தோள்கள், கைகள், கால்கள் மற்றும் முதுகில் flexible ஆக்க உதவும் பயிற்சிகள் அடங்கும். அதை அவர் ஒரு போதும் மிஸ் செய்வதே இல்லையாம்.

card 2

யோகா, நீச்சல் ஆகியவற்றுடன் கார்டியோ செய்யும் சிந்து

சிந்துவிற்கு கார்டியோ செய்வது மிகவும் இஷ்டமாம். அதனால் தனது உடற்பயிற்சி அட்டவணையில், அது கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வாராம். அதோடு, யோகா மற்றும் நீச்சல் ஆகியவையும் தவறாது கடைபிடிக்கிறாராம். அவரது உடற்பயிற்சி, காலை 7:00மணிக்கு தொடங்கி, மதியம் வரை தொடர்கிறது. மீண்டும் மாலை 4:00 மணிக்கு ஆரம்பித்து, இரவு 7:00மணி வரை நீளுமாம். பின்னர் இரவு 8:00 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, 9:00 மணிக்கு உறங்கிவிடுவாராம். மற்ற விளையாட்டு வீரர்களைப் போலவே, சிந்துவின் ஒட்டுமொத்த உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தில், உணவு கட்டுப்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவொரு போட்டிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே, அவரது உணவு கட்டுப்பாடும் தொடங்கிவிடும். புரதசத்து நிறைந்த பால், முட்டை மற்றும் பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்கிறார் சிந்து.