
கோடை வெயிலை சமாளிக்க சோடா, எனர்ஜி ட்ரிங்க் அடிக்கடி குடிப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
கோடையில் அதிக வெப்பத்தில், நீரிழிவு தவிர்க்க Hydration மிகவும் அவசியமாகிறது.
இதற்காக புத்துணர்ச்சியூட்டும் பானங்களை நாம் தேடுகிறோம்.
சோடா முதல் 'எலெக்ட்ரோலைட் நிறைந்தவை' என விளம்பரப்படுத்தப்படும் எனெர்ஜி ட்ரிங்க் வரை சந்தையில் ஏராளமான மாற்றுகள் நுகர்வோருக்கு விற்கப்படுகிறது.
ஆனால் இவற்றை அதிகம் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவுமா?
'இல்லை' என்கிறார்கள் நிபுணர்கள். வெயிலை சமாளிக்க இவற்றை அதிகம் குடித்தால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும், இவற்றிற்கு மாற்று என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
எச்சரிக்கை
பொதுவாக பருகப்படும் பானங்கள் மற்றும் அவற்றின் ஆபத்துகள்
சோடா, கார்பனேற்றப்பட்ட பானங்கள்: உடலில் அதிக சர்க்கரை, கலோரி, பல் சிதைவு, எடை அதிகரிப்பு, டைப் 2 நீரிழிவு மற்றும் எலும்புப் பலவீனம் ஆகியவற்றை உண்டாக்கும்
தொகுக்கப்பட்ட பழச்சாறுகள்: நார்ச்சத்து இல்லாததால் இரத்த சர்க்கரை விரைவில் உயரும். சிலவற்றில் கூடுதல் சர்க்கரையும், செயற்கை சேர்க்கைகளும் சேர்க்கப்படுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்
இனிப்பான ஐஸ்டீ, எலுமிச்சை பானங்கள்: கடை தயாரிப்புகளில் சர்க்கரை அதிகம்.
ஆற்றல் பானங்கள்: அதிக காஃபின் மற்றும் சர்க்கரை, இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், பதட்டம் ஏற்படும்.
விளையாட்டு பானங்கள்: சர்க்கரை அதிகம். வழக்கமான உடற்பயிற்சி இல்லாமல் குடிப்பது தேவையற்ற கலோரி சேர்க்கும்.
செயற்கை இனிப்பு பானங்கள்(டயட் சோடா): நீரிழிவு மற்றும் குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்.
பாதிப்புகள்
அதிகபட்ச நுகர்வால் ஏற்படும் பாதிப்புகள்:
நீர்ச்சத்து இழப்பு
எடை அதிகரிப்பு
பல் சிதைவு
இரத்த சர்க்கரை ஏற்றத் தாழ்வு
செரிமானக் கோளாறுகள்
இதய பிரச்சனைகள்
மாற்றுகள்
செயற்கை பானங்களுக்கு பதிலாக ஆரோக்கியமான மாற்றுகள்
தண்ணீர்: ரேற்றத்திற்கு வெற்று நீர் சிறந்த தேர்வாகும்
பழ, காய் அல்லது மூலிகை சேர்த்து காய்ச்சிய நீர்(Infused water): சுவைக்காகவும், கூடுதல் ஊட்டச்சத்துக்களுக்காகவும் பழத் துண்டுகள்(எலுமிச்சை, வெள்ளரி, பெர்ரி), காய்கறிகள்(வெள்ளரி), அல்லது மூலிகைகள்(புதினா, துளசி) ஆகியவற்றை தண்ணீரில் சேர்க்கவும்
மூலிகை ஐஸ்டீகள்: செம்பருத்தி, கெமோமில் அல்லது மிளகுக்கீரை போன்றவற்றை சேர்த்து செய்யப்பட்ட மூலிகை டீயை பருகலாம்
பழ ஸ்மூத்திகள்: பழங்களை தண்ணீர், இளநீர் அல்லது இனிக்காத பாலுடன் கலக்கவும்
இளநீர்: உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது
தர்பூசணி சாறு: நீரேற்றம் மற்றும் இயற்கையான இனிப்பு நிறைந்த பழம்
எலுமிச்சை ஜூஸ்: நீரேற்றத்துடன் இருக்க ஒரு எளிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வழி
மோர்:செரிமானத்திற்கு உதவும் புரோபயாடிக் நிறைந்த பானம்
சர்பத்:ஒரு பாரம்பரிய இந்திய பானம்