உகாதி ஸ்பெஷல்: தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்!
இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு. பொதுவாக தமிழ் புத்தாண்டில் நாம் இறைவனுக்கு படைக்க இனிப்பும், பானகமும் மற்றும் வேறு சில உணவுகளை தேர்வு செய்து சமைப்பதுண்டு. அந்த வகையில் தெலுங்கு, கன்னடர்கள் புத்தாண்டில் அவர்களின் பாரம்பரிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு தெரிந்து கொள்வோமா? உகாதி பச்சடி: உகாதி பண்டிகையின் முக்கிய உணவு இந்த பச்சடி. புளி தண்ணீர், பொடியாக நறுக்கிய மாங்காய், வேப்பம்பூ, வெல்லம், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் ஆகியவற்றைக் கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. பருப்பு பாயாசம்: உகாதி அன்று செய்யப்படும் பிரபலமான இனிப்பு இதுதான். பாசிப்பருப்பு அல்லது கடலை பருப்பு, வெல்லம் மற்றும் தேங்காய்பால் சேர்த்து செய்யப்படுவது.
பாரம்பரிய உணவுகள்!
எலுமிச்சை சாதம்: கன்னடர்கள் சித்ரன்னா என்று அழைக்கப்படும் எலுமிச்சை சாதம் செய்து புத்தாண்டை கொண்டாடுவது மரபு. தெலுங்கில் இதனை நிம்மகயா புளிஹோரா என்று குறிப்பிடுகின்றனர். கோசம்பரி: இது கர்நாடகாவின் சாலட் வகை. அதில் முளைகட்டிய பாசிப்பயறு, அல்லது பாசிப்பருப்பு, அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரி, துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பச்சையாக சாப்பிடப்படும் சாலட் பொபட்லு: தமிழில் போளி என்றழைக்கப்படும் உணவே இந்த பொபட்லு. கன்னடத்தில் இதனை ஒப்பிட்டு, ஒப்பட்டு, ஹோலிகே என பல பெயர்களில் குறிப்பிடுவதுண்டு.