Page Loader
மயிர்க்கால் எலும்பு முறிவு (Hairline fracture) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
மயிர்க்கால் எலும்பு முறிவு பற்றி சில தகவல்கள்

மயிர்க்கால் எலும்பு முறிவு (Hairline fracture) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 31, 2023
10:33 am

செய்தி முன்னோட்டம்

மயிர்க்கால் எலும்பு முறிவை, ஸ்ட்ரெஸ் பிராக்சர் என்றும் மருத்துவ துறையில் குறிப்பிடுகிறார்கள். எலும்பில் ஏற்படும் ஒரு சிறிய விரிசல் அல்லது எலும்பிற்குள் ஏற்படும் கடுமையான காயத்தை, Hairline fracture என்று கூறுவார்கள். இது பரவலாக, பலவீனமான எலும்புகள் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்களிடையே அதிகம் காணப்படும். அதிகமாக கைகால்களில் உள்ள எலும்புகளில் தான் இவ்வகை முறிவுகள் நிகழும். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு அடிக்கடி ஏற்படும். இவ்வகை எலும்பு முறிவுகள், குணமடைய சிறிது காலம் ஆகும். அநேக நேரங்களில், இந்த மயிர்க்கால் எலும்பு முறிவுகள், ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகின்றன. ஆராய்ச்சியின் படி, பெண்களில், குறிப்பாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவர்களுக்கு, இந்த முறிவுகள் அதிகம் நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

எலும்பு முறிவு

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் வைட்டமின் டி மற்றும் கால்சியம்

மயிர்க்கால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு, பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான வலி, வீக்கம் ஏற்படும். அதோடு, காயம்பட்ட இடத்தை அழுத்தும் போது வலி அதிகரிக்கும். இது மாதிரி நேரங்களில், மருத்துவரின் ஆலோசனை அவசியம். காயம் அடைந்த இடத்தை, உயர்த்தி வைத்து, ஐஸ் கட்டி ஒத்தடம் தருவதால், வீக்கம் சிறிது குறையும். மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணிகளுடன், ஒய்வு எடுப்பதும் அவசியம். சாதாரணமாக, இவ்வகை எலும்பு முறிவுகள் குணமாக, ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும். வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம், உங்கள் எலும்புகளுக்கு வலு கூட்டலாம். இதன் மூலம், hairline fracture அடிக்கடி நிகழாமல் பாதுகாக்கலாம். அதோடு கடினமான வேலைகள் செய்யும் போது கூடுதல் கவனமும் அவசியம்.