முத்த நாள் 2024: முத்தமிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
காதலர் தினத்தை நெருங்கி வரும் நேரத்தில், அதனை வரவேற்கும் விதமாக ஒரு வாரமாக ஒவ்வொரு தினத்தையும் காதலுக்கு அர்ப்பணிக்கும் ஒரு நாளாக கொண்டாடி வருகிறார்கள் காதலர்கள். அந்த வகையில் இன்று, பிப்ரவரி 13 ஆம் தேதி, கிஸ் டே. இந்த நாள் உங்கள் பிரியமானவர்களுடன் முத்தங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதன் மூலமும் கொண்டாப்படுகிறது. ஆனால் காதல் கவர்ச்சி தாண்டி, முத்தம் என்பது நம் நல்வாழ்வில் உறுதியான நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? முத்தம் ஒரு சக்திவாய்ந்த விளைவைக் கொண்டிருக்கிறது. நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி, நமது உடல் நலனை மேம்படுத்துகிறது. முத்தத்தின் சில குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
முத்திடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஹார்மோன்கள்: முத்தம் உங்கள் மூளையில் ஒரு மகிழ்ச்சியான இரசாயனத்தை தூண்டுகிறது. ஆக்ஸிடாசின், டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவை சுரக்கின்றன. இதனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் உணர்கிறீர்கள். மேலும், இது மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கிறது. சுயமரியாதை: முத்தம், கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது சுய மதிப்பு உணர்வுகளை மேம்படுத்துகிறது. இது உங்களை மிகவும் விரும்பத்தக்கதாகவும் நேசத்துக்குரியதாகவும் உணர வைக்கிறது. மன அழுத்த நிவாரணம்: முத்தமிடுவது மற்றும் கட்டிப்பிடிப்பது போன்ற அன்பான சைகைகள், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஆக்ஸிடாஸின் அளவை குறைக்கிறது. இரத்த அழுத்தம்: முத்தம், உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது, இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.