ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு
பயணம் செய்வது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். எனினும் நெடுந்தூரம் ரயில்கள் மூலம் பயணிக்கையில் நம்மால் நினைத்த இடங்களில் இறங்கி சாப்பிடமுடியாது. சிறப்பு ஏ.சி.கோச்.,போன்ற பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு டிக்கெட் எடுக்கும்பொழுதே உணவிற்கான பணமும் வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு ரயிலில் உணவு தயாரிக்கும் இடத்திலிருந்து உணவு கொடுக்கப்படும். ஆனால் நார்மல் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு கிடைப்பது என்பது சிரமமாக தான் வெகுகாலமாக இருந்து வருகிறது. இதற்கான ஒரு திட்டத்தினை தான் தற்போது ரயில்வே துறை ஆலோசித்து ஓர் முடிவினை எடுத்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.20க்கு உணவும், ஒரு தண்ணீர் பாக்கெட் ரூ.3 என மொத்தம் ரூ.23க்கு முழு உணவு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நார்மல் பெட்டிகள் முன்னர் எகனாமி உணவு கவுண்டர்கள்
குறைந்தவிலையில் நார்மல் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு பலவகையான உணவுவகைகள் வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், ரூ.20க்கு கிடைக்கும் வகை-1 உணவில் 7 பூரிகள், காய்கறி குழம்பு, ஊறுகாய் மற்றும் 200மில்லி.,தண்ணீர் உள்ளிட்டவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் வகை 2 உணவுக்கு பயணிகள் ரூ.50 செலுத்தவேண்டும். அதில் பாவ்பாஜி, மசால்தோசை, ராஜ்மா-சாவல், சோலா-குல்ச்சா உள்ளிட்ட உணவுவகைகள் கிடைக்கும். மேலும் முட்டை பிரியாணி ரூ.80, சிக்கன் பிரியாணி ரூ.100, வெஜ் பிரியாணி ரூ.70 உள்ளிட்ட விலைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த உணவுகள் நார்மல் பெட்டியில் பயணிப்போருக்கு இருந்த இடத்திலிருந்து பெறமுடியாது. இந்த உணவுகளை பெற பயணிகள் ரயில்நிலையங்களில் நார்மல் பெட்டிகள் முன்னர் எகனாமி உணவு கவுண்டரினை அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.