NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல் 
    வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல் 
    வாழ்க்கை

    வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல் 

    எழுதியவர் Sindhuja SM
    திருத்தியவர் Venkatalakshmi V
    September 01, 2023 | 11:44 am 1 நிமிட வாசிப்பு
    வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல் 
    இந்திய உணவுகளின் புகழ், தற்போது உலகம் முழுவதும் வேரூன்றி நிற்கிறது.

    உலகில் பல கோடி உணவு வகைகள் இருந்தாலும், இத்தாலியன், இந்தியன், சைனீஸ் போன்ற பாரம்பரிய உணவு வகைகளுக்கு மொவுசு அதிகம். வெளிநாடுகளுக்கு குடியேறிய இந்தியர்களால் பரவ தொடங்கிய இந்திய உணவுகளின் புகழ், தற்போது உலகம் முழுவதும் வேரூன்றி நிற்கிறது. அதிலும், சில உணவுகளை வெளிநாட்டவர்கள் மிகவும் ரசித்து உண்பதால், அந்த குறிப்பிட்ட உணவுகளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி அதிகமாகி கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட உணவுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

    பிரியாணி

    பிரியாணி சுவைக்கு மயங்காதவர்கள் உண்டோ என்பது போல, வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவின் பிரியாணி சுவை மிகவும் பிடிக்கும். இந்தியாவில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் உண்டு. ஆம்பூர் பிரியாணி, தலைப்பக்கட்டி பிரியாணி, ஹைதெராபாதி பிரியாணி, லக்னோ பிரியாணி, காஷ்மீர் பிரியாணி என எண்ணற்ற வகைகள் இங்கே உண்டு. பட்டை, லவங்கம், இஞ்சி,பூண்டு போன்ற மசாலாக்கள் கணிசமான கலவை தான் பிரியாணியின் முக்கிய அம்சம். அந்த பக்குவம் சரியாக இருந்தால் மட்டுமே பிரியாணி ருசியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமோசா, தோசை போன்ற பாரம்பரிய உணவுகள் 

    சமோசா:ஒரு சூடான கப் தேநீருடன் மிருதுவான சமோசாவை உண்பது சொர்க்கத்திற்கு நிகரான ஒரு அனுபவத்தை கொடுக்கும். உருளைக்கிழங்கு, காய்கறிகள், பனீர், சிக்கன் போன்ற ஸ்டப்பிங்களை வைத்து செய்யப்படும் சமோசாவும் இந்தியாவிற்கு வெளியே பிரபலமாக பேசப்படும் ஒரு உணவு வகையாகும். தோசை: உலகளவில் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள் விரும்பும் மிகவும் பிரபலமான இந்திய உணவுகளில் ஒன்று தோசையாகும். தோசை போன்ற உணவுகளில் காரம் குறைவாக இருப்பதால், அனைத்து வகையான உணவு பழக்க வழக்கங்கள் கொண்டவர்களுக்கும் இது பொருத்தமானது என்கின்றனர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.

    நாண் மற்றும் தால் மக்கானி 

    நாண்: வடஇந்தியாவின் பிரபலமான ரோட்டி வகை தான் இந்த நாண். மைதா மாவு சப்பாத்தியில், எள்ளு, மல்லித்தழை போன்றவை சேர்த்து பிரட்டி, நெருப்பில் சுட்டு தரப்படுவது இந்த நாண். மிருதுவான சப்பாத்தி வகையை சேர்ந்தது. இதன் மேல் புறப்படும் சூட வெண்ணை, கூடுதல் சுவையை தருகிறது. தால் மக்கானி: தால் மக்னி, மிகவும் மென்மையான பருப்பு கறியாகும். வட இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் மிகவும் பிரபலமான இந்த வகை பருப்பு கறி பொதுவாக நாண்/ரொட்டியுடன் உண்ணப்படுகிறது. தோல் நீக்காத கருப்பு உளுந்தால் செய்யப்படும் இந்த தால் மக்கனி ஊட்டச்சத்து நிறைந்தது என்பதால் கூடுதல் பிரபலம்.

    மசாலா தோசையும், பில்டர் காபியும்

    மசாலா தோசை: பெங்களுருவில் ஸ்பெஷல் இந்த மசாலா தோசை. அரிசி மாவு, உளுந்து மாவு, சிறிது அவலும் சேர்த்து வாங்கப்படும் மொறு மொறுப்பான தோசையின் நடுவே வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலா, தோசையின் ருசி அபாரமாக இருக்கும். உடன் பரிமாறப்படும் சட்னி மற்றும் சாம்பார், இந்த உணவின் ருசியை அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்லும் பில்டர் காபி:காபி உலகம் முழுவதும் பிரபலமான பானம் என்றாலும், இந்தியாவின் பில்டர் காபி, குறிப்பாக தமிழ்நாட்டின் பிரபலமான காபி, அதன் சிக்கரி கலவையினால் மாறுபடும். காபியில் பல வகைகள் இருந்தாலும், நம்மூரில் பில்டர் காபி, வெளிநாட்டவர்கள் பலருக்கும் பிடிக்கும் என்பது சுவாரசியம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு பிரியர்கள்
    தேசிய ஊட்டச்சத்து வாரம்

    சமீபத்திய

    உணவு பிரியர்கள்

    இதுநாள் வரை நீங்கள் ருசித்த இந்திய தெரு உணவுகள் உண்மையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது இல்லை! தேசிய ஊட்டச்சத்து வாரம்
    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் உலகம்
    மஹாபாரத காலம் முதல் தற்போது வரை பிரபலமாக இருக்கும் சில உணவுகள் என்ன தெரியுமா? உணவு குறிப்புகள்
    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்

    தேசிய ஊட்டச்சத்து வாரம்

    உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  ஆரோக்கியம்
    'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள் உணவு பிரியர்கள்
    ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை இந்தியா
    டீடாக்ஸ் டயட், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த உணவுமுறைப் பழக்கமா? டயட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023