உங்கள் காலை உணவை மேம்படுத்தும் விதைகள்
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள். அதனால் அதை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், அதில் ஆரோக்கியம் நிறைந்து இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அது உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொடங்கி, உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் மதிய உணவு நேரம் வரை பசி உணர்வை தடுக்கிறது. உங்கள் காலை உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய நலன்களை மேம்படுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால் தவறாமல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சத்தான விதைகளை உங்கள் காலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
சியா விதைகள்
சியா விதைகள் உங்கள் காலை உணவினை ஊட்டச்சத்து மிகுந்ததாக மாற்றக்கூடிய சக்தி கொண்டது. அவற்றுள், நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. திரவத்துடன் கலக்கும்போது, சியா விதைகள் ஜெல் போன்ற நிலையை உருவாக்குகின்றன. இது கிரீமி மற்றும் திருப்திகரமான அமைப்பை உண்பவர்களுக்கு வழங்குகிறது. தயிர், ஸ்மூத்தி அல்லது ஓட்மீலில் ஒரு ஸ்பூன் சியா விதைகள் சேர்க்கப்படுவது உங்கள் காலை உணவின் ஊட்டச்சத்தை கணிசமாக மேம்படுத்தும்.
ஆளி விதைகள் (Flax Seeds)
இந்த சிறிய விதைகளில், ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெயர் பெற்றது. மேலும், ஆளி விதைகள், நார்ச்சத்துக்கான சிறந்த மூலாதாரமாகும். இது செரிமானத்தை சீராக்க உதவுவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தவும் உதவுகிறது. அவற்றின் ஊட்டச்சத்து திறனை முழுமையாக பெற, ஆளி விதைகளை பொடியாக்கி, உங்கள் காலை காபியுடன் கலந்து குடிக்கலாம்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள், உங்கள் காலை உணவிற்கு சூரிய ஒளி மகத்துவத்தையும் மற்றும் மொறுமொறுப்பான க்ரஞ்ச்சி எபெக்ட்டும் தரும். சூரியகாந்தி விதைகள், வைட்டமின் ஈ, சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் மெக்னீசியம்- தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு முக்கியமான கனிமத்துடன் நிரம்பியுள்ளது. இந்த விதைகள், உங்கள் காலை உணவை மேம்படுத்த ஒரு சுவையான வழியாகும். உங்கள் காலை உணவுடன் சிறிது சூரியகாந்தி விதைகளை சேர்த்தோ, அல்லது தனியாக ஸ்னாக் போலவும் சாப்பிடலாம்.
பூசணி விதைகள்
பெபிடாஸ் என்றும் அழைக்கப்படும் பூசணி விதைகள், நாள் முழுவதும் புரதம் நிறைந்த காலை உணவை தேர்வுசெய்பவர்களுக்கு உகந்ததாகும். இந்த விதைகளில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. அவை ஊட்டச்சத்து சக்தியாக அமைகின்றன. பூசணி விதைகளின் சுவையை மேலும் கூட்டுவதற்கு பூசணி விதைகளை வறுக்கவும். உங்கள் காலை கஞ்சியுடனோ அல்லது செரியல்களுடன் கலந்து சாப்பிடலாம்.