காலை உணவு என்பது ஏன் மிக முக்கியமானது?
செய்தி முன்னோட்டம்
இரவு உணவுக்கு பிறகு, பல மணிநேரங்கள் உணவு மற்றும் நீர் இல்லாமல் உழைத்த நமது உடலுக்கு காலை உணவு என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
அதனால்தான், காலை வேளையில் ராஜாவை போல் உண்ண வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட காலை உணவை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்
அதிக இடைவேளைக்கு பிறகு, நாம் உணவை எடுத்து கொள்வதால் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால், அன்றைய தினம் வேலை செய்யத் தேவையான ஆற்றல் கிடைக்கும். ஆரோக்கியமான காலை உணவு நம்மை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்
காலை உணவில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நமது உடல் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம்.
டோஜிகிவ்ன
உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்
காலை உணவைத் தவிர்ப்பது நமது உடல் எடையைக் குறைக்கும் என்பது தவறான நம்பிக்கை. தொடர்ந்து காலை உணவை உட்கொள்பவர்களுக்கு உடல்-பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. காலை உணவைத் தவிர்ப்பது உடலின் இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து, உடல் எடையையும் அதிகரிக்கும்.
சர்க்கரை அளவை சமன் செய்யும்
நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவது முக்கியமாகும். காலை உணவு அதைச் சரியாகச் செய்ய உதவும். சர்க்கரை அளவு சமநிலையில் இருந்தால், அது நமது உடலையும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நோய்களை தடுக்கும்
நாம் காலை உணவை தவறாமல் எடுத்துக் கொண்டால், உடல் பருமன் மற்றும் வகை-2 நீரிழிவு நோயை தடுக்கலாம். காலை உணவு, இருதய நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டது.