வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது
வைட்டமின் ஈ என்பது உங்கள் உடலுக்குத் தேவைப்படக்கூடிய ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது பொதுவாக உங்கள் உடலில் உள்ள செல்களை மீண்டும் புதுப்பித்துடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் தேவைப்படும் ஆன்டி-ஆக்ஸிடென்டினை (anti -oxidant) போதுமான அளவிற்கு தருகிறது. மற்றும் அழற்சி (inflammation) எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. பொதுவாகவே வைட்டமின் ஈ சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தோற்றத்திற்கும் நிறைய பயன் தரக்கூடியது என்று அனைவரும் அறிந்தது தான். மேலும், இது உங்களை இளமையாக வைப்பதோடு, உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்க பெரிதும் உதவுகிறது.
சரும ஆரோக்கியத்துக்கு சிறந்த நன்மைகளை கொடுக்கும் 'வைட்டமின் ஈ'
வைட்டமின் ஈ எண்ணெயில் உள்ள மிகச்சிறந்த நன்மைகள் பின்வருமாறு: ஃபோட்டோ-ஏஜிங் (photoaging) என்று கூறப்படும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புக்கு வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (anti-oxidants) நிறைந்துள்ள இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சரும ஆரோக்கியத்திற்கு, வைட்டமின் ஈ ஆயில், மற்ற வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்ஸை விட மிகவும் பயனுள்ளது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, குளிர்க்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியையும் சரி செய்து சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்குவதோடு, கண்களில் கீழ் உள்ள கருவளையங்களையும் நீக்குகிறது. மேலும் குளிர்காலங்கள் உதடுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் பிளவுகளை இது சரி செய்கிறது.