புரட்டாசி ஸ்பெஷல்: சத்தான வெஜிடேரியன் சிக்கன் சூப் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தற்போது ஊரெங்கும், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நேரத்தில், நமது உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது மிகவும் அவசியம்.
சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது, சத்தான உணவுகளை தேடி சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். டெங்கு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சூப் குடிப்பதை வடிக்கையாக்கி கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
அதிலும் காரசாரமான மிளகு போட்ட சிக்கன் சூப் பலரின் ஃபேவரிட்.
ஆனால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாதவர்களுக்காகவே இந்த வெஜிடேரியன் சிக்கன் சூப்
card 2
தேவையான பொருட்கள்
வெஜிடபிள் ஸ்டாக் செய்ய:
விருப்பப்பட்ட பச்சை காய்கறிகள் (காளிஃபிளவர், பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், கீரை, ப்ரோக்கோலி)
வெங்காயம் - 1
பூண்டு
ஸ்ப்ரிங் ஆனியன்
தண்ணீர் - 2 லிட்டர்
மிளகு கல் உப்பு - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - 2
சூப் செய்ய
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளை - 100 கிராம்
வெஜிடபிள் ஸ்டாக்
ப்ராக்லி
காளான்
சைனீஸ் முட்டைகோஸ்
பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
card 3
செய்முறை:
முதலில் வெஜிடபிள் ஸ்டாக் செய்து கொள்ளலாம்
1.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், செலெரி ஸ்டிக், நசுக்கிய பூண்டு சேர்க்கவும்.
2. பின்பு காய்கறிகள், மிளகு, கல் உப்பு, பிரியாணி இலை சேர்க்கவும்.
3. பிறகு பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 1 மணிநேரம் வேகவிடவும்.
4. பின்பு காய்கறிகள் வேகவைத்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
வேக வைத்த காய்கறிகளை பின்னர் நீங்கள் சமைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த வெஜிடபிள் ஸ்டாக்கை ஒரு பாட்டிலில் மூடி பிரிட்ஜில் வைக்க, 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
card 4
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கி வைத்த பீன்ஸ், கேரட், உருளை துண்டுகளை சேர்க்கவும்.
உருளை கிழங்கு சேர்க்க மறவாதீர்கள். காரணம், அதுதான், சிக்கனுக்கு மாற்றான, அதே சுவை தரக்கூடிய பொருளாகும்.
அதனுடன், நறுக்கிய ப்ராகலி, காளான், பூண்டு, மிளகு தூள், சைனீஸ் முட்டைகோஸ், சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம், மிதமான தீயில் வேகவிடவும்.
அனைத்தும் நன்றாக கொதித்ததும், தேவைப்பட்டால், சிறிதளவு வெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து பரிமாறவும்.