LOADING...
தோசை கல் கருப்பாகிவிட்டதா? கறை நீக்கி நீண்ட காலம் பயன்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்
தோசை கல்லின் தன்மையை கெடுக்காமல் சுத்தப்படுத்துதல் அவசியம்

தோசை கல் கருப்பாகிவிட்டதா? கறை நீக்கி நீண்ட காலம் பயன்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
06:24 pm

செய்தி முன்னோட்டம்

தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் தோசை கல், சரியான முறையில் பராமரிக்கப்படாவிட்டால் காலப்போக்கில் விடாப்பிடியான கறைகளுடனும், தீய்ந்த படிமங்களுடனும் காட்சியளிக்கும். இக்கறைகளை நீக்க கடினமான கம்பி நார்களை (Steel Scrubbers) பயன்படுத்தினால், கல்லின் மேற்பரப்பு சேதமடைந்து தோசை ஒட்டும் நிலை ஏற்படும். தோசை கல்லின் தன்மையை கெடுக்காமல் சுத்தப்படுத்த சில எளிய வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நொடியில் சுத்தம் #1

சுத்தம் செய்யும் முறைகள்

1.பேக்கிங் சோடா மற்றும் வினிகர்: கல்லின் மீது பேக்கிங் சோடா தூவி, அதன் மேல் வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றை தெளிக்க வேண்டும். 15 நிமிடங்கள் ஊறவைத்து மென்மையான ஸ்பான்ஞ்ச் கொண்டு தேய்த்தால் பிசுபிசுப்பு நீங்கும். 2.எலுமிச்சை மற்றும் உப்பு: இரும்பு தோசை கல்லிற்கு இது மிகவும் சிறந்தது. கல்லை சிறிது சூடாக்கி கல் உப்பு தூவி, நறுக்கிய எலுமிச்சையை கொண்டு தேய்த்தால் துரு மற்றும் கறைகள் அகலும். 3.வெந்நீர் முறை: கல் மிகவும் கருப்பாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கொதிக்க வைப்பதன் மூலம் தீய்ந்த படிமங்கள் இளகி வரும். பின்னர் மரக் கரண்டியால் லேசாக சுரண்டி அவற்றை அகற்றலாம்.

நொடியில் சுத்தம் #2

பராமரிப்பு

பாதுகாப்பான கழுவுதல்: நான்-ஸ்டிக் கல்லில் எப்போதும் மென்மையான திரவங்களையே (Liquid soap) பயன்படுத்த வேண்டும். கழுவிய பின் கல்லை நன்றாக உலர வைத்து, ஒரு சொட்டு சமையல் எண்ணெயை தடவி வைப்பதன் மூலம் கல்லை புதியது போலவே பராமரிக்க முடியும். இந்த முறைகளைப் பின்பற்றுவதால் கல்லின் ஆயுள் அதிகரிப்பதோடு, தோசையும் மென்மையாக வரும்.

Advertisement