
பல் துலக்க டூத் பிரஷ் வாங்கும் போது, நீங்கள் கவனிக்க வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
உங்கள் புன்னகை உங்களின் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்றாகும். மேலும் நல்ல வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதும் அதிமுக்கியமானது.
உங்கள் வாய்வழி பராமரிப்புக்கான அடிப்படை கருவிகளில் ஒன்று, நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் டூத் பிரஷ் ஆகும்.
தற்போது நுகர்வோர் சந்தையில் இதற்கான ஏராளமான தேர்வுகள் இருப்பதால், கவர்ச்சிகரமான விலையில் இருப்பதால், சரியான பிரஷ்-ஐ தேர்ந்தெடுப்பது சற்று குழப்பமான விஷயமாக இருக்கும். கவலை வேண்டாம்!
உங்களுக்கு சரியான பிரஷ் எப்படி தேர்வு செய்வது என்பதை இங்கே விளக்குகிறோம்
card 2
டூத் பிரஷ் வகை
இரண்டு முக்கிய பிரஷ்கள் வகைகள் உள்ளன: கையால் இயக்குவது மற்றும் மின்சாரத்தால் இயக்கப்படுவது.
அதனால், உங்கள் தேவைக்கேற்ப, உங்களின் தேர்வை முடிவெடுத்து கொள்ளலாம். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 2-நிமிடங்களுக்கு நீங்கள் துலக்குவதை உறுதிசெய்ய, எலக்ட்ரிக் டூத்பிரஷ்கள் பெரும்பாலும் உள்ளமைக்கப்பட்ட டைமர்களுடன் வருகின்றன.
பிரஷ்களின் முக்கியமான பாகம் பிரிஸ்ல்(Bristles) தான். இது மூன்று வகைகளில் உண்டு; மென்மை, நடுத்தரம் மற்றும் கடினமான என மூன்று வகைகளில் வருகிறது. எனினும், பற்கள் மற்றும் ஈறுகள் பாதுகாப்பிற்காக, மென்மையான பிரிஸ்ல் கொண்ட பிரஷ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.அதேபோல, பிரஷ்ஷின் மேல்பாகம், சிறியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பற்களின் கடைசி வரை சென்று சுத்தம் செய்ய இயலும். அதேபோல, டூத் பிரஷ்ஷின் கைப்பிடி பிடிப்பதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும்.