NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தினமும் எத்தனை முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது? நிபுணர்கள் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தினமும் எத்தனை முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது? நிபுணர்கள் எச்சரிக்கை
    தினமும் எத்தனை முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது?

    தினமும் எத்தனை முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது? நிபுணர்கள் எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 16, 2024
    09:05 am

    செய்தி முன்னோட்டம்

    முட்டை மிகவும் சத்தான உணவாகும். குறிப்பாக, குளிர்காலத்தில் இது பல நன்மைகளை வழங்கும் சத்துக்களை கொண்டுள்ளன.

    முட்டையில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பி12, டி, ஏ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன.

    காலை உணவில் முட்டைகளைச் சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. ஆனால், அதை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானது.

    ஊட்டச்சத்து நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில், "மனித உடலுக்கு உகந்த செயல்பாட்டிற்கு தினமும் 50-60 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

    முட்டைகளை புரதத்திற்காக எடுத்துக் கொண்டாலும், ​​​மற்ற புரதம் நிறைந்த உணவுகள் உங்கள் உணவில் இணைக்கப்பட வேண்டும்." என பரிந்துரைக்கின்றனர்.

    தீமைகள் 

    முட்டைகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் ஏற்படும் தீமைகள்

    ஊட்டச்சத்து நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில், தினமும் 2-3 முட்டைகளை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். இதை காலை 2 மற்றும் மாலை 1 என பிரித்து உட்கொள்ளலாம்.

    காலை உணவில் 2 முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஒவ்வொரு முட்டையும் ஏறத்தாழ 5 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் இதய ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது,

    இதில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கும். முட்டைகள் நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான நுகர்வு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    முட்டைகளை அதிகமாக உண்பது சிறுநீரகங்களில் புரதச் சுமையை அதிகரிக்கிறது. இது சிரமத்தையும் நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தும்.

    அதிகப்படியான முட்டைகளிலிருந்து அதிக அளவு வைட்டமின் ஏ வயதுக்கு ஏற்ப ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கலாம்.

    நன்மைகள்

    முட்டைகளை சரியான அளவு சேர்த்துக் கொள்வதன் நன்மைகள் 

    முட்டைகளை சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பிற உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதங்களையும் பெற்று, பாதகமான விளைவுகள் இல்லாமல் ஊட்டச்சத்து நன்மைகளை உடல் உறுதி செய்கிறது.

    மிதமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

    அதே நேரத்தில் இந்த பல்துறை சூப்பர்ஃபுட்டின் நன்மைகளைப் பெறுகிறது.

    இங்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவாவனையே ஆகும். ஏதேனும் உடல்நல சிக்கல்கள் உள்ளவர்கள், இதை பின்பற்றும் முன் முறையான மருத்துவ வழிகாட்டுதலை கண்டிப்பான பெற வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கியம்
    ஆரோக்கியமான உணவுகள்
    ஆரோக்கிய குறிப்புகள்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி

    ஆரோக்கியமான உணவு

    பித்தப்பையில் கல் உருவாக காரணமாகும் முக்கிய காரணிகள் இவைதான் உடல் ஆரோக்கியம்
    உங்களுக்கு ஏற்ற பாலை தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு சின்ன கைடு பால்
    இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழங்கள் மூலம் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஊட்டச்சத்து
    ஒற்றை தலைவலியிலிருந்து நிவாரணம் பெற சில உணவு டிப்ஸ் நோய்த்தடுப்பு சிகிச்சை

    ஆரோக்கியம்

    நாக்கின் நிறத்தை வைத்தே பக்கவாதத்தை கண்டறியும் AI தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு
    பில்டர் காபி தெரியும்..காளான் காபி பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்  ஆரோக்கியமான உணவு
    இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த மூன்று வழிமுறைகளை பின்பற்றுங்கள் தூக்கம்
    இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகளா? இதைத் தெரிஞ்சிக்கோங்க உடல் ஆரோக்கியம்

    ஆரோக்கியமான உணவுகள்

    தினசரி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? உணவு குறிப்புகள்
    இரும்பு சத்து அதிகம் உள்ள ஆரோக்கிய உணவுகள் எவை எனத்தெரியுமா? உணவு குறிப்புகள்
    குழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா? குழந்தை பராமரிப்பு
    மஞ்சள் டீ: இந்த புதிய வகை டீயின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு? ஆரோக்கியம்

    ஆரோக்கிய குறிப்புகள்

    வீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR எச்சரிக்கை  ஆரோக்கியமான உணவு
    கோடை காலத்தில் உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்களை நிரப்பக்கூடிய உணவுகள் கோடை காலம்
    ஹைட்ரஜன் நீர்: நன்மைகள் மற்றும் அபாயங்களை தெரிந்துகொள்ளுங்கள்  ஆரோக்கியம்
    ஸ்பைருலினா: சைவ டயட் சூப்பர்ஃபுட் என்பது அறிவீர்களா? ஊட்டச்சத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025