விக்கலில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள்
செய்தி முன்னோட்டம்
தினசரி வாழ்க்கையில், எதிர்பாரா வண்ணம் ஏற்படும் விக்கல், ஒருவரை எரிச்சலூட்டும். அதிலும், நீங்கள் என்ன செய்தபோதும் அடங்காத விக்கல், ஒரே தொல்லை தான்.
அப்படி திடீரென ஏற்படும் விக்களில் இருந்து விடுபட, நீங்கள் இயற்கையான, வீட்டு வைத்தியங்களை செய்யலாம்.
சர்க்கரை: பலகாலமாக, விக்கல் ஏற்படும் போது, சர்க்கரையை பயன்படுத்துவது பிரபலமான வீட்டு வைத்தியம். விக்கல் ஏற்படும்போது, ஒரு ஸ்பூன் வெள்ளை அல்லது நாட்டு சர்க்கரையை, சுமார் 10 வினாடிகள் வாயில் ஊறவைத்து, அதை விழுங்கவும். அதன்பின்னர் சிறுது தண்ணீர் பருகவும். சர்க்கரையின் சிறிய துகள்கள், உங்கள் தொண்டையில் லேசான எரிச்சலை ஏற்படுத்தி, உங்கள் மனதை திசை திருப்புகிறது.
card 2
விக்கலை அடக்கும் எலுமிச்சையும், ஏலக்காயும்
எலுமிச்சை: பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய எலுமிச்சை, விக்கலை அடக்கவும் உதவுகிறது. எலுமிச்சை பழத்தின் சாறை சிறிது வாயில் பிழிந்து விடலாம், அல்லது உறிஞ்சலாம். அதன் புளிப்பு சுவை உங்கள் நரம்புகளை தூண்டி, விக்கலை தடுக்கும்.
ஊறுகாய் அல்லது ஊறுகாய் சாறு: விக்கல்களை உடனடியாக நிறுத்த மற்றொரு வழி, உங்களுக்கு பிடித்த ஊறுகாயை சாப்பிடுவது அல்லது அதன் சாறை சுவைப்பது. இதுவும், உங்கள் நரம்புகளை திசை திருப்பும். உங்கள் விக்கல் நிற்கும் வரை, ஊறுகாய் சாற்றின் சில துளிகளை சுவைக்கலாம்.
ஏலக்காய்: ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். முடிந்ததும், ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து, 15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பிறகு, தண்ணீரை வடிகட்டி, பருகவும்.