உங்களுக்கு ஷுகர் இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் இந்த கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, சரியான உணவுகளைத் தேர்வு செய்வதில் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். மேலும், வளர்சிதை மாற்றக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவை ரத்த சர்க்கரை அளவைக் உயர்த்தக்கூடும் என்பதால் உங்களுக்கு குழப்பம் நேரிடலாம். ஒரு வேளை உணவிற்கு குறைந்த அளவு 45-60 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும், சிற்றுண்டி உணவுகளுக்கு 15-20 கிராம் சிற்றுண்டிக்கு கார்போஹைட்ரேட்டுகளும் பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் இந்த கார்போஹைட்ரேட் அளவு, உங்கள் உடல் நிலை மற்றும் மருந்து சிகிச்சை அடிப்படையில் மாறலாம். இந்த குழப்பத்தை களைய, கீழ்காணும் ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளலாம். அது உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கியம் நிறைந்த உணவுகள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இவை இயற்கையாகவே சுவையானது, நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களால் நிரம்பியுள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீரமைக்கவும், எடை குறைக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க சிறந்த தேர்வு. பருப்பு வகைகள்: கார்போஹைட்ரேட்டுகளைப் பெற ஒரு மற்றொரு ஆரோக்கியமான வழி பருப்பு வகைகள். பருப்பு மற்றும் கொண்டைக்கடலை தினசரி உணவில் சேர்த்தால், புரதம் மற்றும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை பெறலாம், இதனால் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஆரோக்கியம் நிறைந்த கான்டினென்டல் உணவுகள்
பாஸ்தா: ஒரு முறை பாஸ்தா சாப்பிடுவதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இதனால், முழு தானியங்களால் ஆன பாஸ்தாவை தேர்ந்தெடுக்கலாம். இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். குயினோவா: குயினோவா முழுமையான புரதம் கொண்ட ஒரு தானியம். இது நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றிகள், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்தது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து, உற்சாகமாகவும், திருப்தியாகவும் வைத்திருக்க உதவுகிறது.