LOADING...
ஆரோக்கியமான வாழ்விற்கு வெற்றிலை: செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் எளிய வீட்டு வைத்தியம்
முன்னோர்கள் பயன்படுத்திய வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது

ஆரோக்கியமான வாழ்விற்கு வெற்றிலை: செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் எளிய வீட்டு வைத்தியம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
06:30 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில், முறையற்ற உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாகப் பலரும் செரிமான கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, நமது முன்னோர்கள் பயன்படுத்திய வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வெற்றிலையை மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீர், உணவை எளிதில் செரிக்க செய்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, வெற்றிலை உடலில் உள்ள 'வாத தோஷத்தை' சீர்செய்து, குடல் தசைகளை சுறுசுறுப்பாக்குகிறது.

நன்மைகள்

சளித் தொந்தரவுக்கு வெற்றிலை வைத்தியம்

சளி, இருமல் மற்றும் மார்புச் சளியால் அவதிப்படுபவர்களுக்கு வெற்றிலை ஒரு வரப்பிரசாதம். இரண்டு வெற்றிலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து இடித்துச் சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தால் நெஞ்சுச் சளி விரைவில் குணமாகும். வெற்றிலையில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி, லேசாக சூடுபடுத்தி மார்பில் ஒத்தடம் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச பாதிப்புகள் மற்றும் மூச்சுத்திணறல் குறையும். வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்குவதோடு, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இருப்பினும், வெற்றிலையின் முழுமையான பலனை பெற, அதைச் சீரகம், ஏலக்காய் போன்ற இயற்கை பொருட்களுடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.

நேரம்

வெற்றிலையை சாப்பிட சரியான நேரம் எது?

வெற்றிலையை உணவுக்கு பின் சாப்பிடுவதே மிகச்சிறந்த பலனை தரும். குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவது செரிமானத்தை வேகப்படுத்தும். வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது சிலருக்கு அசிடிட்டியை ஏற்படுத்தலாம். புகையிலை, அதிகப்படியான சுண்ணாம்பு அல்லது ரசாயன பொருட்கள் கலந்த 'பாக்கு' வகைகளை சேர்த்து சாப்பிடுவது புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement