முடி மாற்று அறுவை சிகிச்சை வலிக்குமா? வழுக்கையை போக்க நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய உண்மைகள்
செய்தி முன்னோட்டம்
இன்றைய காலத்தில் முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை என்பது பலருக்கும் ஒரு பெரிய கவலையாக உள்ளது. இதற்குத் தீர்வாக ஹேர் டிரான்ஸ்பிளான்ட் (Hair Transplant) எனப்படும் முடி மாற்று அறுவை சிகிச்சை பிரபலமாகி வருகிறது. இருப்பினும், இதனைப் பற்றிப் பல தவறான தகவல்கள் மக்களிடையே நிலவுகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் இந்தச் சிகிச்சையை மிக எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
வலி நிறைந்தது
முடி மாற்று சிகிச்சை மிகவும் வலி நிறைந்தது
இது ஒரு தவறான கருத்து. நவீன FUE மற்றும் DHI தொழில்நுட்பங்கள் மூலம், இந்தச் சிகிச்சை மிகவும் குறைந்த வலியுடனேயே செய்யப்படுகிறது. சிகிச்சையின் போது தலையில் மரத்துப்போகும் மருந்து கொடுக்கப்படுவதால், நோயாளிக்கு வலி தெரியாது. பலரும் சிகிச்சையின் போது இசை கேட்டுக்கொண்டோ அல்லது பேசிக்கொண்டோ இருக்கும் அளவிற்கு இது வசதியானது. பழைய முறைகளில் குணமடைய அதிக நாட்கள் தேவைப்பட்டது உண்மைதான். ஆனால், இன்றைய நவீன முறைகளில் சிகிச்சை முடிந்த 2 முதல் 3 நாட்களிலேயே மக்கள் தங்களது வழக்கமான வேலைகளுக்குத் திரும்ப முடியும். லேசான வீக்கம் அல்லது தடிப்பு இருந்தால் கூட, அது 48 மணி நேரத்திற்குள் மறைந்துவிடும்.
தழும்புகள்
தலையில் தழும்புகள் ஏற்படும்
முன்பு ஸ்ட்ரிப் (Strip) முறையில் தலைமுடி எடுக்கப்பட்டபோது தழும்புகள் ஏற்பட்டன. ஆனால், இப்போது உள்ள FUE முறையில் தனித்தனி முடிகள் எடுக்கப்படுவதால், தலையில் தழும்புகள் தெரிவதில்லை. சிகிச்சைக்குப் பிறகு முடி வளர்ந்ததும், அது இயற்கையான முடியைப் போலவே இருக்கும்; அறுவை சிகிச்சை செய்த தடம் தெரியாது. "நட்ட முடி பொம்மை முடி போலத் தெரியும்" என்பது ஒரு பழைய நம்பிக்கை. தற்போதுள்ள மருத்துவர்கள் முடியின் கோணம், திசை மற்றும் அடர்த்தி ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு நடுகின்றனர். இதனால் வளரும் முடி உங்கள் இயற்கையான முடியுடன் இணைந்து, மிகவும் இயல்பான தோற்றத்தைத் தரும்.
மன அழுத்தம்
இது மிகவும் மன அழுத்தமான விஷயம்
பலரும் இதனை ஒரு பெரிய அறுவை சிகிச்சையாகப் பார்த்துப் பயப்படுகிறார்கள். உண்மையில், இது ஒரு நீண்ட குரூமிங் செஷன் (Grooming Session) போன்றதுதான். பாதுகாப்பான சூழலில், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் செய்யப்படும் போது, இது எந்தவிதமான பக்கவிளைவுகளும் அற்ற எளிய நடைமுறையாகவே இருக்கிறது.