LOADING...
கிளியோபிளாஸ்டோமா: பிரபல எழுத்தாளரின் மரணத்திற்கு காரணமான அறிகுறிகளே இல்லாமல் வளரும் மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்
பிரபல எழுத்தாளரின் மரணத்திற்கு காரணமான மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்

கிளியோபிளாஸ்டோமா: பிரபல எழுத்தாளரின் மரணத்திற்கு காரணமான அறிகுறிகளே இல்லாமல் வளரும் மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 13, 2025
10:18 am

செய்தி முன்னோட்டம்

ஷாப்போஹாலிக் (Shopaholic) நாவல் தொடரின் பெஸ்ட் செல்லிங் எழுத்தாளர் சோஃபி கின்செல்லா, வீரியமிக்க மூளைப் புற்றுநோயான கிளியோபிளாஸ்டோமாவால் (Glioblastoma) தனது 55வது வயதில் காலமானார். மிகவும் தீவிரமான புற்றுநோய் வகைகளில் ஒன்றான இந்த நோயால் அவரது மறைவு, இதன் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வழிவகுத்துள்ளது. கிளியோபிளாஸ்டோமா என்பது மூளைப் புற்றுநோயின் மிகத் தீவிரமான வடிவமாகும். இந்த நோய் பெரும்பாலும் அறிகுறிகள் இன்றி அமைதியாக வளரத் தொடங்குகிறது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் நடந்தபோதிலும், இதற்கு நிரந்தர சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை. சரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும், பெரும்பாலான நோயாளிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்கின்றனர். இந்த நோய் மரபணு சம்பந்தப்பட்டது கிடையாது.

முக்கியமான அறிகுறிகள்

கிளியோபிளாஸ்டோமாவின் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்

தீவிரமான தலைவலி: காலப்போக்கில் மோசமடையும், குறிப்பாக காலையில் தீவிரமாகும் தலைவலி. இது குமட்டல், வாந்தி அல்லது பார்வைக் கோளாறுகளுடன் வரலாம். பெரியவர்களுக்கு வலிப்பு: ஒருவருக்குப் புதிதாக ஏற்படும் திடீர் வலிப்பு, உடல் உதறுதல் அல்லது மயக்கம் ஆகியவை அவசர மருத்துவ கவனத்தைக் கோருகின்றன. நரம்பியல் குறைபாடுகள்: கை அல்லது கால்களில் பலவீனம், பேச்சுக் குறைபாடு, அல்லது சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல்கள் படிப்படியாக மோசமடைதல். ஆளுமை மாற்றங்கள்: அதிக மறதி, கவனம் செலுத்துவதில் சிரமம், எரிச்சல் அல்லது திடீர் உணர்ச்சி மாற்றங்கள். தொடர்ச்சியான குமட்டல் மற்றும் வாந்தி: இது செரிமானப் பிரச்சினைகளுடன் தொடர்பில்லாமல், தலைவலியுடன் சேர்ந்து வந்தால் பரிசோதனை தேவை.

சிகிச்சை முறைகள்

கிளியோபிளாஸ்டோமாவிற்கான சிகிச்சை முறைகள்

கிளியோபிளாஸ்டோமாவுக்கான நிலையான சிகிச்சையில், கட்டியைப் பாதுகாப்பாக அகற்ற அறுவை சிகிச்சை, அதைத் தொடர்ந்து கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் வாய்வழி கீமோதெரபி (டெமோசோலோமைடு) ஆகியவை அடங்கும். மல்டிபராமெட்ரிக் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது. இந்த நோய் வேகமாக வளருவதால், ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, உடனடி மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நோயாளியின் விளைவுகளை மேம்படுத்த உதவும்.

Advertisement