
சீக்கிரம் எடை குறைய, இந்த பழங்களை உண்ணத்தொடங்குங்கள்
செய்தி முன்னோட்டம்
எடை இழப்பு என்று வரும்போது , மக்கள் பெரும்பாலும் பழங்கள் சார்ந்த உணவுக்கு மாறுகிறார்கள் . இருப்பினும், அனைத்து பழங்களும், உங்கள் எடை குறைப்பிற்கு உதவும் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அது தவறு!
சில பழங்களில், கலோரிகள் அதிகமாக இருப்பதாகவும், அது எடை குறைப்பிற்கு உதவுவதை விட, எதிர்வினையே ஆற்றும் என சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆக்கபூர்வமான முறையில் எடையை குறைக்க, கீழ கூறப்பட்டுள்ள பழங்களை உண்ணுங்கள்.
card 2
பெர்ரி
பெர்ரி நீங்கள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் சில.
அவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியவை ஆகும். பொதுவாக, அனைத்து பெர்ரிகளிலும் கலோரிகள் குறைவாக இருக்கும்.
உதாரணமாக, ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில், 50 -ற்கும் குறைவாகவே கலோரிகள் உள்ளது.
எனவே நீங்கள் காலை உணவிற்கு, யோகர்ட், சாலடுகள், தானியங்கள் அல்லது ஸ்மூத்திகளில், ஃபிரெஷ் அல்லது உறைந்த பெர்ரிகளை சேர்க்கலாம்.
card 3
ஆரஞ்சு
ஆரஞ்சு பழங்களில் கலோரிகள் மிகக் குறைவு. அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன.
அதனால், இந்த பழத்தை உண்பதால், ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவும்.
ஒரு நடுத்தர அளவிலான ஆரஞ்சு, வெறும் 73 கலோரிகள் மற்றும் 2.8 கிராம் நார்ச்சத்து அளிக்கிறது.
அதனால், இது எடை இழப்பிற்கான டயட் உணவில் சேர்க்க ஒரு சிறந்த பழமாக அமைகிறது.
card 4
ஆப்பிள்கள்
நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய சிறந்த குறைந்த கலோரி பழங்களில் ஆப்பிள் ஒன்றாகும்.
ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில், சுமார் 52 கலோரிகள் உள்ளன.
எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஆப்பிள்களை பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம்.
அவற்றை சாலடுகள், தயிர், சிரியல்ஸ் (cereals), ஜூஸ் போன்றவற்றில் சேர்க்கலாம்.
card 5
தர்பூசணி
தர்பூசணியின் எடையில் 90% தண்ணீராக இருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சாப்பிடுவதற்கு இது சிறந்த பழங்களில் ஒன்றாகும்.
உடல் நீரேற்றத்துடன் இருக்க உதவுவதோடு, தர்பூசணியை சிற்றுண்டி போல சாப்பிடுவதும் உங்களை நிறைவாக உணர உதவும்.
100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதனால், உடல் எடையை குறைப்பது மிகவும் சுலபமாகி விடும்!
card 6
கிவி
இந்த சிறிய பச்சை நிற பழத்தில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஒரு நடுத்தர அளவிலான கிவிப்பழம், 42 கிலோகலோரி மற்றும் 2.1 கிராம் நார்ச்சத்து வழங்குகிறது.
நீங்கள் கிவியை பச்சையாக சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அதை ஜூஸ் செய்யலாம், சாலட்களில் பயன்படுத்தலாம், உங்கள் காலை சிரியல்ஸ்-இல் சேர்த்து உண்ணலாம்