Page Loader
மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?
மாம்பழத்தோடு சேர்த்து உண்ண கூடாத பொருட்கள் சிலவற்றை உணவு நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்

மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2023
11:31 am

செய்தி முன்னோட்டம்

சீசன் பழங்களில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அதன் ருசி, நாக்கை சப்புக்கொட்ட வைக்கும். மேங்கோ ஜூஸ், மேங்கோ லஸ்ஸி என அதில் பல விதமான உணவு ரெசிப்பிகளும் உண்டு. ஆனாலும், மாம்பழத்துடன் சேர்க்கக்கூடாத உணவுகளும் சில உண்டு. அதாவது மாம்பழத்தில் உள்ள தாதுசத்துக்கள், சில பொருட்களுடன் சேரும் போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம் எனக்கூறுகிறார்கள் உணவு நிபுணர்கள். அவை எவை என தெரிந்து கொள்ளுங்கள். மாம்பழம் + ஐஸ்கிரீம்: மாம்பழமும் ஐஸ்கிரீமையும் சேர்த்து உண்ணக்கூடாது. மாம்பழம் உடல் சூட்டை கிளப்பும், ஐஸ் கிரீம் குளிர்ச்சியான பொருள். அதனால் இவை இரண்டையும் சேர்க்க கூடாது. மாம்பழம் + எலுமிச்சை: சிட்ரஸ் பழங்களை மாம்பழத்துடன் இணைப்பதால், உடலில் உள்ள pH அளவு குறையலாம்.

card 2

மாம்பழத்துடன் சேர்க்க கூடாத உணவு பொருட்கள் 

மாம்பழம்+தயிர்: மாம்பழத்தையும், தயிரையும் சேர்க்க கூடாதாம். மாம்பழம் உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும். தயிர் குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால் எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட உணவுகளை ஒன்றிணைக்க கூடாது. மாம்பழம்+மதிய உணவு: மதிய உணவோடு சேர்த்து மாம்பழத்தை உண்ணக்கூடாதாம். பொதுவாக எந்த பழங்களும் உணவோடு சேர்த்து உண்டால், செரிமானத்தை பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மாம்பழம்+ கூல் ட்ரிங்க்ஸ்: குளிர்ச்சியான எந்த பொருளுடனும் மாம்பழத்தை சேர்க்க கூடாது. மாம்பழங்களை, உணவு உண்ட சிறிது நேரம் கழித்து எடுத்துக்கொள்ளலாம். தற்போது சந்தைகளில் கிடைக்கும் மாம்பழங்கள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதால், நன்றாக கழுவி, தோல் நீக்கி உண்ண வேண்டும் என அறிவுறுத்திகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.