60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?
பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டாம் க்ரூஸ், இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமீபத்தில் அவர் நடித்த படத்தின் ஸ்டண்ட் சீன் ஒன்று வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலரின் மனத்திலும், 60 வயதை தொட்ட ஒரு நபரால், இவ்வளவு பிட்டாக, யூத்தாக தோற்றமளிக்க முடியுமா என்பது தான் கேள்வியாக இருந்தது. அவரது பிறந்தநாளில், அவர் எப்படி ஃபிட்டாக இருக்கிறார் என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள். பலவித உடற்பயிற்சிகளை முயற்சி செய்து கொண்டே இருப்பாராம் டாம் க்ரூஸ். ஒரு பேட்டியின் போது, "கடல்-கயாக்கிங், கேவிங், ஃபென்சிங், டிரெட்மில், வெயிட்ஸ், ராக்-க்ளைம்பிங், ஹைகிங், ஜாகிங்... நான் பலவிதமான பயிற்சிகளை முயற்சி செய்கிறேன்." எனக்குறிப்பிட்டுள்ளார்.
வலுவான மனம், நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியம்
உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும், மனம் ஒரு பங்கு வகிக்கிறது. மனதை ஆரோகியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் டாம் க்ரூஸ். "தோல்விகளையும் பின்னடைவுகளையும் படிக்கற்களாக பார்க்கவேண்டும்" என கூறுகிறார். 'டாம் குரூஸ் டயட்' தான் அவர் எப்போதும் இளமையாக இருப்பதற்கான அவரது ரகசியம். ஒரு நாளைக்கு 1200 கலோரிகளை மட்டுமே கொண்ட உணவை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். அதுவும், வறுக்கப்பட்ட உணவுகள். அதில் கார்போஹைட்ரேட்டுகள் எதுவும் இருக்காது. டாம் க்ரூஸ், எப்போதும் ஜிமில் பழியாக கிடைப்பதில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உடற்பயிற்சிக்கு விடுமுறை கொடுத்துவிடுகிறார். மாறாக அன்று லேசான நடைபயிற்சி செய்கிறார். 'Cheat Day' என்பது அவரது அகராதியில் இல்லை. உணவு கட்டுப்பாட்டில் எப்போது, சுத்தமான மற்றும் சீரான உணவில் கவனம் செலுத்துவர் என்கிறது செய்திகள்