ஃபேஷன்: உங்கள் முக வடிவத்திற்கான சரியான காதணிகளை தேர்வு செய்ய உதவும் டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஃபேஷன்: கல்லூரிக்கு செல்லும் பருவ பெண்களாகட்டும், ஓட்டமும் நடையுமாக அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களாகட்டும், அல்லது விருந்து உபசாரங்கள், திருமண வைபவகங்களுக்கு ஸெல்ல திட்டமிட்டு கொண்டிருக்கும் மகளிராகட்டும், காலத்திற்கும், உங்கள் உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு உடையும், ஆபரணமும் தேர்வு செய்வதில் பெரும்பாலும் குழப்பமே நீடிக்கும்.
குறிப்பாக Accessories எனப்படும் அணிகலன்களை தேர்வு செய்வது எப்போதுமே கடினம் தான். சிலர் உடைக்கு ஏற்ப அணிய சொல்வதுண்டு.
சிலர் நிகழ்ச்சிக்கு ஏற்ப அணிய அட்வைஸ் செய்வார்கள். ஆனால், இரண்டு தேர்விலும், உங்கள் முக அமைப்பிற்கு தகுந்தாற்போல தேர்வு செய்வதே சிறந்தது.
உங்களுக்கு உதவ இதோ சில குறிப்புகள்:
card 2
வட்ட வடிவ முகங்களுக்கு
வட்ட முகங்கள், கிட்டத்தட்ட சம விகிதத்தில் அகலம் மற்றும் நீளம் கொண்ட மென்மையான வளைவுகளைக் கொண்டுள்ளன.
உங்கள் முகத்திற்கு நீண்ட, மெல்லிய காதணிகளுடன் எடுப்பாக இருக்கும். சதுர வடிவ ஸ்டுட்கள், செவ்வக வடிவத்தில் தொங்கும் காதணிகள் போன்ற கோண வடிவங்கள் உங்கள் முகத்தை நீளமாக காட்டும்.
மாறாக வட்ட வடிவமான காதணிகளை அணிவதை தவிர்க்கவும்.
ஏனெனில் இந்த டிசைன்கள் உங்கள் வட்ட முகத்தை கூட கொஞ்சம் வட்டமாக காட்டும்.
card 3
ஓவல் வடிவ, இதய வடிவிலான முகங்களுக்கு
இதய வடிவிலான முகங்கள், இதய வடிவத்தில், அதாவது, நெற்றி பகுதியில் அகலமாகவும், கன்னத்திற்கு கீழ், கூறாக முடியும் அமைப்பு கொண்டிருப்பார்கள்.
சற்றே அகலமான காதணிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் (சாண்ட்லியர் டிசைன்), நீங்கள் ஒரு அழகான தோற்றத்தை உருவாக்கலாம். பியர் ஷேப் காதணிகள் ஒரு சிறந்த தேர்வாகும்.
ஓவல் வடிவ முகங்களுக்கு, டிராப் காதணிகள், ஸ்டுட்கள், வளையங்கள் எனப்படும் ரிங்ஸ் என அனைத்தும் ஓவல் வடிவ முகத்தை உடையவர்கள் அணியலாம். ஆனால், மிகப்பெரிய சைஸ் காதணிகள் அணிவதை மட்டும் தவிர்க்கவும்.
card 4
சதுர வடிவ, முக்கோண வடிவ முகங்களுக்கு
சதுர முகங்கள், அகண்ட தாடைகள் மற்றும் அகலமான நெற்றியைக் கொண்டிருப்பார்கள். உங்கள் முகத்தின் சதுர வடிவத்தை எடுத்துக்காட்ட, நீளமான, வட்ட வடிவ காதணிகளை அணியுங்கள். இது உங்கள் முகத்தை நீளமாக்குவதற்கும் உதவும்.
ஒரு முக்கோண முகத்திற்கான காதணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, நீளமான மற்றும் மெல்லிய காதணிகள் சிறந்த தேர்வுகளாக கருதப்படுகிறது. முக்கோண முக வடிவத்திற்கு, ஸ்டுட்களுடன், த்ரெடர் காதணிகள் மற்றும் நீண்ட நூலகளால் செய்யப்பட்ட குஞ்சம் எனப்படும் டேஸ்ஸல் ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும்.