தியானமும், அதனை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்!
மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து தான் தியானம். எந்த வயது வித்தியாசமின்றியும், மதச்சார்பின்றியும், எவரும் செய்யக்கூடிய தியானத்தை சுற்றி பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை: கட்டுக்கதை 1: உட்கார்ந்து தான் தியானம் செய்யவேண்டும் பெரும்பாலானோர், தரையில் அமர்ந்து தியானம் செய்வதே சரியான வழி என எண்ணுகின்றனர். ஆனால், படுத்துக்கொண்டோ, நடந்துகொண்டோ கூட நீங்கள் தியானம் செய்யலாம். உலகின் பல நாடுகளில், நடைபயிற்சி தியானங்கள், நடைபயணம் தியானங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது. கட்டுக்கதை 2: தியானம் என்பது எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமே நீங்கள் தியானத்தில் அமரும் போது, மனதில் எண்ணங்கள் அலைபாய்வது இயற்கையே. எண்ணங்களை கட்டுப்படுத்தாமல், அவற்றை பற்றி அறிந்துகொண்ட பின்பு ஏற்படும், ஒரு அமைதியான சூழலே, ஆழ் நிலை தியான நிலை ஆகும்.
பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவும் தியான பயிற்சி
கட்டுக்கதை 3: தியானம் தான் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வழி தியானம் என்பது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அல்லது அவற்றிலிருந்து தற்காலிக நிவாரணம் பெற ஒரு வழி என்று பலர் நம்புகிறார்கள். எனினும், அது உண்மையல்ல. மாறாக, உங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், புன்னகையுடன் அவற்றை ஏற்றுக்கொள்ளவும் உதவுகிறது. கட்டுக்கதை 4: தியானத்தின் பலன்களை பெற, பல வருட பயிற்சி தேவை ஒரு முறை தியானம் முடித்த உடனேயே, மிகவும் நிதானமாகவும், சுறுசுறுப்பாகவும், தெளிவாகவும் உணருவீர்கள் என ஆய்வுகள் கூறுகின்றது. கட்டுக்கதை 5: அதிக நேரம் தியானம் செய்வது கடினமானது அதிக நேரம் தியானம் செய்வதால், உங்கள் மனம் அமைதியுறும், உடலின் பல்வேறு உணர்வுகளை சீர்செய்ய உதவுகிறது. தொடர் தியானத்தினால், நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.