LOADING...
தந்தையர் தினம் 2026: வெறும் ஸ்டேட்டஸோடு நிறுத்தாமல் அப்பாவுக்கு என்ன பரிசு வாங்கித் தரலாம்?
தந்தையர் தினத்தில் தந்தைக்கு அளிக்க வேண்டிய பரிசுகள்

தந்தையர் தினம் 2026: வெறும் ஸ்டேட்டஸோடு நிறுத்தாமல் அப்பாவுக்கு என்ன பரிசு வாங்கித் தரலாம்?

எழுதியவர் Vasuki
Jun 15, 2026
02:38 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமை உலகளவில் தந்தையர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த 2026-ஆம் ஆண்டில் வரும் ஜூன் 21-ஆம் தேதி தந்தையர்தினம் வருகிறது. காதலர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம் போன்றவற்றைத் தேதிகளின் அடிப்படையில் நாம் எளிதாக நினைவில் வைத்திருப்போம். தந்தையர் தினம் பொதுவாக எப்போது வருகிறது என்பது பலருக்கும் முன்கூட்டியே தெரிவதில்லை. அன்றைய நாளில் சமூக ஊடகங்களில் யாராவது 'ஸ்டேட்டஸ்' போடுவதை பார்த்துவிட்டுதான் இன்றுதான் தந்தையர் தினமா? என்று அவசர அவசரமாக வாழ்த்துசொல்வது பலரது வழக்கமாக உள்ளது. இந் முறை நமக்கு முன்கூட்டியே போதிய அவகாசம் இருப்பதால், நமக்காகத் தங்களது வாழ்நாளையே தியாகம் செய்த அப்பாக்களுக்கு சிறந்த பரிசுகளை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தலாம்.

பேனா மற்றும் டைரி

தனிப்பயனாக்கப்பட்ட கிஃப்ட் மற்றும் கேக் கொண்டாட்டங்கள்

நமக்காக வாழத் தெரியாத, தனக்கென்று பெரிதாக எதையும் வாங்கிக் கொள்ளாத அப்பாக்களுக்கு, அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு சிறிய விஷயத்தைச் செய்தாலே அது அவர்களது இதயத்தை உன்னத மகிழ்ச்சியில் நனையச் செய்யும். இந்த நாளுக்காக இணையத்தில் தேடினால் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்பாவின் பெயர் அச்சிடப்பட்ட பிரத்தியேகப் பேனா, தரமான லெதர் பர்ஸ், கைக்கடிகாரம் அல்லது அவருக்குப் பிடித்தமான நிறத்தில் சட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கித் தர முன்கூட்டியே திட்டமிடலாம். அன்றைய நாளை இனிமையாகத் தொடங்க ஒரு சிறிய கேக் வாங்கி, குடும்பத்துடன் வெட்டி கொண்டாடுவதும் சிறந்தது.

பழைய நண்பர்கள் சந்திப்பு

வாசிப்பு மற்றும் பயணப் பிரியர்களுக்கான பரிசுகள்

அப்பாக்களின் தனிப்பட்ட ரசனைக்கு ஏற்பப் பரிசுகளைத் தேர்வு செய்வது இன்னும் கூடுதல் புரோட்டோகால் மதிப்பைத் தரும். உங்கள் அப்பா தினமும் அதிகாலையில் நாளிதழ் அல்லது செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர் என்றால், அவருக்குப் பிடித்தமான முதன்மை நாளிதழுக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டிற்கான சந்தாவை நீங்கள் செலுத்திக் கொடுக்கலாம். அதேபோல், அவர் வெகுநாட்களாகப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஆன்மீகத் தலத்திற்கோ அல்லது சுற்றுலாத் தலத்திற்கோ அவரை நேரில் அழைத்துச் செல்லலாம். அவர் நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த அவருடைய நெருங்கிய பழைய நண்பர்களை ரகசியமாக உங்கள் வீட்டுக்கு வரவழைத்து அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கலாம்.

Advertisement

உடற்பயிற்சி சார்ந்த பரிசுகள்

ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் சார்ந்த தேர்வுகள்

வயதான காலத்தில் அப்பாக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவது பிள்ளைகளின் கடமையாகும். உங்கள் அப்பா தினமும் காலை நேரத்தில் நடைப்பயணம் செல்பவராக இருந்தால், அவருக்கு அசுர வேக நடையின் போதும் கால்களுக்கு இதமளிக்கும் வகையிலான நல்ல பிராண்டட் வாக்கிங் ஷூ, கையில் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய அழகிய குடிநீர் பாட்டில் அல்லது சௌகரியமான டி-ஷர்ட் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். வெகுநாட்களாக அவர் வாங்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கண்டறிந்து பரிசளிப்பதும் உன்னதமானது.

Advertisement

நேரத்தை செலவிடுதல்

பரிசுகளை விட உன்னதமான 'நேரம்'

பரிசுப் பொருட்கள் ஒருபுறம் இருந்தாலும், வயதான காலத்தில் பெரும்பாலான அப்பாக்கள் ஏங்குவது தங்களது பிள்ளைகளின் அன்பிற்காகவும், அவர்களுடன் செலவிடும் நேரத்திற்காகவும் மட்டும்தான். நம்மோடு பிள்ளைகள் அமர்ந்து பேசவில்லையே, நேரத்தைச் செலவிடவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அப்பாக்கள் பல பேர் உண்டு. எனவே, ஜூன் 21-ல் மற்ற அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, அன்றைய நாள் முழுவதும் உங்கள் அப்பாவுடன் அமர்ந்து பேசி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் அவருடன் செலவிடும் அந்த உன்னதமான நேரம்தான், இந்தத் தந்தையர் நாளில் அவருக்குக் கிடைக்கக்கூடிய ஆகச்சிறந்த, உலகிலேயே மிகப்பெரிய உலகளாவிய பரிசாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement