ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பால் கவலைக்கிடம்; வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரோஹித் பால் மோசமான உடல்நலையால், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. ஸ்ரீநகரில் பிறந்த ரோஹித் பால், கடந்த 1986 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். தற்போது 62 வயதாகும் பால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்திற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு நவம்பரில், பாலின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாலிற்கு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோஹித் பால் 2006ல் இந்திய ஃபேஷன் விருது விழாவில், "டிசைனர் ஆப் தி இயர்" விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.