
தினமும் அதிகரிக்கும் கோடை வெயில்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
ஒரு சில மாவட்டங்களில், 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த வெப்பசலனத்தில் சன் ஸ்ட்ரோக் பாதிப்பும் பலருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.
அதிக நேரம் கோடை வெயிலில் பாதிக்கப்படுவதால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க நீங்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும், செய்யக்கூடாதவை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகள் மற்றும் கால்நடைகளை வெளியே அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்.
உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். அதனால் தாகம் எடுத்தாலும் எடுக்கவில்லை என்றாலும், தண்ணீர், ஜூஸ் போன்றவை குடிக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
வெப்பகாலத்தில் செய்யக்கூடாதவை
வெப்பத்தால், சன்ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும் என்பதால், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெளியே செல்லவேண்டிய கட்டாயம் இருப்பின், கண்டிப்பாக தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதே வேளையில், பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதற்கு பதிலாக மோர், எலுமிச்சை ஜூஸ், பானகம், தண்ணீர் போன்றவற்றையே குடிக்க வேண்டும்.
அதிக புரதம் நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
பருத்தி துணியால் செய்யப்பட்ட ஆடைகளை மட்டுமே அணியவேண்டும்.