வியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
கொரோனா காலத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும், உலக சுற்றுப்பிராயணத்தில் மிகவும் ஈடுபாடு காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி மக்கள் தேர்ந்தெடுக்கும் நாடுகளில், வியட்நாமும் ஒன்று. அழகும் வளமும் மிக்க இந்த சிறிய நாட்டில் நீங்கள் நிம்மதியாக சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால், சில விஷயங்களை தவிர்க்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். பேரம் பேச மறக்காதீர்கள்: நம்ம நாட்டை போலவே, வியட்நாமிய சந்தைகளிலும் பேரம் பேசி பொருட்களை வாங்குவது, பொதுவான நடைமுறையாகும். பல விற்பனையாளர்கள், பேரம் பேசி பொருட்களை விற்க வேண்டி இருப்பதால், விலை அதிகமாகவே விற்பதுண்டு. சாலையை கடக்கும்போது தயங்க கூடாது: இதுவும் நம் ஊரை போன்றே தான். சாலையை கடக்கும் போது, கவனமாகவும், அலைபாயாமலும் கடக்க வேண்டும். இல்லையென்றால், விபத்து நேரிடலாம்.
முறையான மசாஜ் நிலையங்களை தேர்ந்தெடுத்து செல்லவும்
வியட்நாமில், நீங்கள் சாலையை கடக்கும் வேகத்தையும், திசையையும் பொறுத்து, ஓட்டுனர்கள் அவர்களின் வேகத்தை தீர்மானிப்பது வழக்கம். முறையற்ற மசாஜ் நிலையங்களைத் தவிர்க்கவும்: வியட்நாம் முழுக்க, பல சட்டவிரோத மசாஜ் நிலையங்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட, முறையற்ற மசாஜ் நிலையங்களை விசாரித்து செல்வது உங்களுக்கு நல்லது. குழாய் நீரை குடிக்க வேண்டாம்: இந்த நாட்டில், பொதுவாக, குழாய் நீரைக் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், அங்கே குழாய் நீர் சுத்தீகரிக்கப்படுவதில்லை. அதனால், நுகர்வோருக்கு ஏற்றதில்லை. அதற்கு பதிலாக, பாட்டில் நீரை பயன்படுத்தலாம். ஆனால், அங்கும், நம்பகத்தன்மைக்கான குறியீட்டை சரி பார்த்தபின்பு வாங்கவும். ஏனென்றால், வியட்நாமில் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதோடு, மறுவிற்பனை செய்ய குழாய் நீரை நிரப்புவதாகவும் கூறப்படுகிறது.