மின்னும் சருமம் வேண்டுமா? ஆயுர்வேத நிபுணர் பரிந்துரைக்கும் காலை நேர 'மேஜிக் ட்ரிங்க்'
செய்தி முன்னோட்டம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு..புத்தாண்டும் நெருங்குகிறது; பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற விலை உயர்ந்த க்ரீம்களையும் சீரம்களையும் நாடுகிறீர்களா? தேவையில்லை! மிக எளிமையான முறையில் நம் வீட்டு சமையலறையில் உள்ள சியா விதைகளை கொண்டே அழகிய சருமத்தைப் பெற முடியும் என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சியா விதை
சியா விதை நீரின் 4 முக்கிய நன்மைகள்
1. சரும ஈரப்பதம்: சியா விதைகள் தனது எடையை விட 10 மடங்கு அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இவை ஒரு ஜெல்லி போன்ற அமைப்பை உருவாக்குவதால், இதை அருந்தும்போது சருமம் உள்ளிருந்து ஈரப்பதத்துடன் (Plump and Radiant) இருக்க உதவுகிறது. 2. முதுமையைத் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்: இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சுற்றுப்புறச் சூழல் மாசுகளால் ஏற்படும் சருமப் பாதிப்புகளைத் தடுத்து, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகின்றன. சூரிய ஒளியால் ஏற்படும் முதிர்ச்சியை இது பெருமளவு குறைக்கிறது.
மேலும் நன்மைகள்
சருமத்தில் சியா விதைகள் செய்யும் அற்புதங்கள்
3. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை (Skin Barrier) வலுப்படுத்த ஒமேகா-3 மிக அவசியம். சியா விதைகளில் இது அதிக அளவில் உள்ளதால், சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது. 4. பருக்கள் மற்றும் வீக்கம் (Acne & Inflammation): முகப்பரு மற்றும் சரும வீக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு சியா விதை நீர் ஒரு சிறந்த தீர்வாகும். இதில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் சருமத்தில் ஏற்படும் சிவப்புத் தன்மை மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தயாரிப்பு
அதிசய ட்ரிங்க் தயாரிக்கும் முறை
ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 தேக்கரண்டி சியா விதைகளைச் சேர்க்கவும். விதைகளை நன்றாக கிளறிவிட்டு, குறைந்தது 15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். கூடுதல் சுவை மற்றும் நன்மைகளுக்கு இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதை அதிகாலை வெறும் வயிற்றில் குடிப்பது கூடுதல் நன்மைகளை தரும். கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை பெற அதனுடன் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழங்கள் அல்லது நட்ஸ் சேர்த்து பருகலாம்.