கல்லூரி மாணவர்களுக்கு பில் கேட்ஸ் கூறிய ஐந்து அட்வைஸ்!
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பில் கேட்ஸ் அமெரிக்காவில் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுடனான உரையின் போது தான் கற்ற ஐந்து விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முதலாவதாக, நாம் எப்போதும் வாழ்க்கையில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பயணிப்பதில்லை. முதலில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே நிரந்தரமானது என நினைப்போம். ஆனால், நாம் நிறைய முறையை பாதையை மாற்றுவோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது, வாழ்வில் நாம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் அவ்வப்போது வரும். ஆனால், அதனைக் கண்டு பயப்படக் கூடாது. நிதானமாக மூச்சை இழுத்துவிடுங்கள், பிறகு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிதானமாக ஆராயுங்கள். தீர்வு உங்களைத் தேடி வரும்.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸின் அட்வைஸ்:
மூன்றாவது, நம்முடைய வாழ்வே வாழ்ந்து கொண்டே பிறருக்கும் உதவும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளங்கள். சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலான வேலையைச் செய்வது நம்மை மேலும் வேலை செய்யத் தூண்டும். பிறருக்கு உதவுவதற்கான நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நான்காவது, நண்பர்களை இலகுவாக எண்ணிவிடாதீர்கள். உங்களுடைய ஒவ்வொரு நண்பரும் உங்களுக்கான நெட்வொர்க். எனவே, கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
இறுதியாக, கடின உழைப்புக்கு இடையில் உங்களுடைய வாழ்க்கையை வாழ மறந்துவிடாதீர்கள். இளமைக் காலத்தில் இடைவெளிகள் எடுப்பதை நான் விரும்பியதில்லை, வாரஇறுதி நாட்களில் கூட. என்னுடன் பணிபுரிபவர்கள் விடுப்பு எடுப்பதையும் நான் விரும்பியதில்லை. ஆனால், வேலையைக் கடந்து வாழ்க்கையில் நாம் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது.