Loading...
92% துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் வீட்டு சிறுநீர் பரிசோதனை முறை; மருத்துவ உலகில் புதிய புரட்சி
92% துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் வீட்டு சிறுநீர் பரிசோதனை முறை

92% துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் வீட்டு சிறுநீர் பரிசோதனை முறை; மருத்துவ உலகில் புதிய புரட்சி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2026
02:33 pm

செய்தி முன்னோட்டம்

சிறுநீரகப் பை (Bladder) புற்றுநோயை 92 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் கண்டறியக்கூடிய புதிய எளிய பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலேயே செய்யக்கூடிய இந்த சிறுநீர் பரிசோதனை மூலம் புற்றுநோயை மிக விரைவாகவும், வேதனையற்ற முறையிலும் கண்டறிய முடியும் எனக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரகப் பையில் உள்ள செல்கள் கட்டுப்பாடன்றி வளர்ந்து கட்டிகளாக மாறுவதே இந்தப் புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாகும். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது மிக முக்கியமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

ஆய்வில் திருப்புமுனை

NHS மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வின் திருப்புமுனை முடிவுகள்

ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வில், GALEAS Bladder என்ற சிறுநீர் பரிசோதனை கருவி பரிசோதிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் NHS அமைப்பை சேர்ந்த 7 மருத்துவமனைகளில் 964 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 77 பேரில் 71 பேரை இந்தக் கருவி சரியாகக் கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் இந்த சிறுநீர் பரிசோதனையின் துல்லியத்தன்மை 92.2 சதவீதம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துல்லியம்

அதி தீவிரப் புற்றுநோயைக் கண்டறிவதில் 97% துல்லியம்

அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதில் இந்தக் கருவி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கேற்ற தசை வரை ஊடுருவிய அனைத்துப் புற்றுநோய் பாதிப்புகளையும் இது துல்லியமாகக் கண்டறிந்தது.

மேலும் தீவிர புற்றுநோய் பாதிப்பு கொண்ட 36 பேரில் 35 பேரை இது சரியாக அடையாளம் காட்டியுள்ளது.

இதன் மூலம் கடுமையான புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதில் இந்த சோதனை 97.2 சதவீதத் துல்லியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சிஸ்டோஸ்கோபி

சிஸ்டோஸ்கோபி பரிசோதனைக்கு மாற்றாக மாறுமா?

தற்போது சிறுநீரகப் பை புற்றுநோயைக் கண்டறிய சிஸ்டோஸ்கோபி என்ற ஊடுருவல் முறை பரிசோதனையே பயன்படுத்தப்படுகிறது.

இது நோயாளிகளுக்குக் மிகுந்த அசௌகரியத்தையும் வலியையும் தரக்கூடிய ஒன்றாகும்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சிறுநீர் பரிசோதனை சிஸ்டோஸ்கோபி முறைக்கு முழுமையான மாற்றாக உடனடியாக மாறாது.

இருப்பினும், யாருக்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் தேவை என்பதைக் கண்டறியும் ஒரு முதற்கட்டத் திரையிடல் கருவியாக இது பெருமளவில் பயன்படும்.

ADVERTISEMENT