
ஜோஜோபா எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
செய்தி முன்னோட்டம்
ஜோஜோபா எண்ணெய் பொதுவாக வட அமெரிக்காவில் வளர்க்கப்படும் ஜோஜோபா தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
இது பல்வேறு சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஜோஜோபா எண்ணெய் முதுமையைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சுருக்கங்களைக் குறைத்து சருமத்தை பராமரிக்கிறது.
இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
தோல் அழற்சிக்கும் ஜோஜோபா எண்ணெயை பயன்படுத்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த, இந்த இயற்கை எண்ணெய் முகத்தில் ஏற்படும் சருமத் திட்டுகளை குறைக்கும்.
தோல் நோயினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் ஆற்றலும் உள்ளது.
jojoba oil
ஜோஜோபா எண்ணெய் பலன்கள்
காயம் ஏற்பட்ட பகுதிகளில் அதாவது பாதிக்கப்பட்ட பகுதியில் புதிய தோலின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஜோஜோபா எண்ணெய் நல்ல பலன்களை தருகிறது.
ஒரு ஆரம்ப ஆய்வில், இந்த எண்ணெய் தோல் செல்களை ஒன்றாக பிணைத்து, காயத்தின் மீது ஒரு லேயரை உருவாக்கி, மறைத்துவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. காயத்தைச் சுற்றியுள்ள புண்களைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
மேலும் பொடுகு வராமல் தடுக்கிறது. அதன் ஈரப்பதமூட்டும் தன்மை வறட்சியைத் தடுக்கிறது, இது செதில்கள் மற்றும் அரிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது.
இது சருமத்தில் மென்மையாகவும், ஈரப்பதமூட்டவும் உதவுகிறது.
கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் மற்றும் தழும்புகள் கூட இந்த எண்ணெயைத் தடவினால் மறைந்து போகும் என்று கூறபபடுகிறது.