LOADING...
செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் பயன்பாட்டால் நன்மை என்றாலும்... நிபுணர்கள் கவலை
செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் பயன்பாட்டால் நன்மை என்றாலும்... நிபுணர்கள் கவலை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 08, 2025
07:58 pm

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்கு ஏங்கும் லட்சக்கணக்கான தம்பதிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. பிரான்சில் உள்ள வல்லுநர்கள், செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சையின் வெற்றி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக வாய்ப்புள்ள கருக்களை தேர்ந்தெடுக்கவும் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனினும், இதில் சில நெறிமுறைக் கவலைகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறைந்த முயற்சி

குறைந்த முயற்சிகளில் வெற்றி

IVF சிகிச்சையில், ஆய்வகத்தில் விந்து மற்றும் கருமுட்டையைச் சேர்த்து உருவாக்கப்படும் கருவின் வெற்றி விகிதம் மாறுபடும். பாரிஸில் உள்ள ஒரு IVF மையத்தின் தலைவர் நதாலி மாசின் கருத்துப்படி, கருவின் வளர்ச்சி மற்றும் உயிரணுப் பிரிவின் வடிவம், சமச்சீர்மை போன்ற தரவுகளை ஏஐ கருவிகள் பயன்படுத்துகின்றன. இயந்திர கற்றல் போன்ற ஏஐ கருவிகள், வெற்றிகரமாகப் பொருத்தப்பட அதிக வாய்ப்புள்ள அல்லது சேமிப்புக்காக உறைய வைக்கப்பட சிறந்த வாய்ப்புள்ள கருவைத் தேர்ந்தெடுக்க மருத்துவர்களுக்கு உதவுகின்றன.

உணர்வு

உணர்ச்சிப்பூர்வ போராட்டத்தைக் குறைத்தல்

ஏஐ கருவியைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மை என்னவென்றால், இது தம்பதிகளுக்கு ஆகும் அதிக செலவு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைக் குறைக்கும். குறைபாடுகள் காரணமாகக் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் கருக்களை ஆரம்பத்திலேயே நிராகரிப்பதன் மூலம், IVF முயற்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். ஏஐ கருவிகள் கருவை நேரடியாக மாற்றியமைக்காததால், மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட 'டிசைனர் குழந்தைகள்' பற்றிய கவலைகள் இதில் இல்லை என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். ஏஐ பரிந்துரைக்கும் கருவிகளில் மரபணு குறைபாடுகள் இருக்க 70% வாய்ப்பு இல்லை என்று ஒரு ஏஐ கருவி தெரிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். எனினும், எந்தக் கருவைத் தேர்ந்தெடுப்பது என்ற இறுதி முடிவை மனிதர்களே எடுப்பார்கள் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement