
அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்ட பார்சல்!
செய்தி முன்னோட்டம்
ஆண்களின் உடைகள் தேர்வு பற்றி, வைரலான ட்வீட், இணையத்தில் சில நாட்களாக பகிரப்பட்டு வருகிறது. அதை பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்;
ஒரு சிலருக்கு ஒரு வினோத பழக்கமும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட கலர் பிடித்துவிட்டால், அதே கலரில் விதவிதமாக உடைகள் வாங்குவதுண்டு.
உதாரணமாக, நீல கலர் பிடித்தவர்கள், வெளிர் நீலம், அடர் நீலம், நீலத்தில் கோடு போட்டது என 'விதவிதமாக' வாங்கி தள்ளுவார்கள்.
அப்படி ஒரு கணவன், தன்னுடைய கப்போர்ட் முழுக்க நீல கலரில் டிரஸ் வைத்திருப்பதை பார்த்து கடுப்பான மனைவி, அவரை தொல்லை செய்து புது உடை வாங்க அனுப்பி உள்ளார்.
ஷாப்பிங் முடித்து, கணவர் வாங்கி வந்ததை பார்த்து ஷாக் ஆன அந்த மனைவியின் பதிவு இதோ:
ட்விட்டர் அஞ்சல்
நொந்துபோன மனைவியின் பதிவு!
Husband went to shop alone as I have been nagging that his wardrobe is full of blue shirts. He comes back with these ...🤐 pic.twitter.com/ikIy0XNL2X
— Dr. Divya Sharma (@divya_sharmaMD) April 8, 2023