முடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவும் 5 இயற்கை மூலிகை ஹேர் ரின்ஸ்
செய்தி முன்னோட்டம்
இயற்கையான மூலிகை ஹேர் ரின்ஸ்களை வழக்கமாக பயன்படுத்துவது, தலைமுடி வளர்ச்சிக்கும், அதன் பலத்திற்கும் ரொம்பவே உதவும். இந்த ரின்ஸ்கள், எளிதாக கிடைக்கக்கூடிய, பல நல்ல குணங்கள் கொண்ட மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கடைகளில் விற்கும் ஹேர் ப்ராடக்ட்களுக்கு இது ரசாயனம் இல்லாத, செலவு குறைவான சிறந்த மாற்று வழியாகும். இந்த இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், கடுமையான ரசாயனங்கள் அல்லது விலை உயர்ந்த சிகிச்சை இல்லாமல், ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.
குறிப்பு 1
உச்சந்தலையைத் தூண்ட ரோஸ்மேரி ரின்ஸ்
ரோஸ்மேரி (Rosemary), உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்குப் பெயர் பெற்றது. ரோஸ்மேரி ரின்ஸ் தயாரிக்க, புதிய அல்லது உலர்ந்த ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் போட்டு சுமார் 30 நிமிடம் கொதிக்க வைக்கவும். ஆறியதும், அந்த நீரை வடிகட்டி, ஷாம்பு போட்டு தலைமுடியை அலசிய பிறகு கடைசியாக தலைக்கு அலச பயன்படுத்தலாம். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைக் குறைக்க உதவும்.
குறிப்பு 2
கூந்தல் ஊட்டச்சத்துக்காக ஆம்லா ரின்ஸ்
நெல்லிக்காய் என்று அழைக்கப்படும் ஆம்லா, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது கூந்தலுக்கு ஊட்டச்சத்து தரும். ஆம்லா ரின்ஸ் தயாரிக்க, ஆம்லா பொடியை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி பயன்படுத்தவும். ஊட்டச்சத்து நிறைந்த இந்த நீர், தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உச்சந்தலையை ஆரோக்கியமாக்கி, கூந்தலுக்குப் பளபளப்பைக் கொடுக்கும்.
குறிப்பு 3
கூந்தல் மென்மைக்காக செம்பருத்தி ரின்ஸ்
செம்பருத்தி பூக்களுக்கு, கூந்தலை மென்மையாகவும், சுலபமாக கையாளக்கூடியதாகவும் மாற்றும் தன்மை உண்டு. செம்பருத்தி ரின்ஸ் தயாரிக்க, பூக்களை தண்ணீரில் போட்டு, தண்ணீர் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும். ஆறியதும், கலவையை வடிகட்டி, ஷாம்பு போட்ட பிறகு கடைசியாக தலைக்கு அலச பயன்படுத்தவும். * இந்த இயற்கை கண்டிஷனர், கூந்தல் சிக்கல் நீங்கி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
குறிப்பு 4
கூந்தல் பலத்திற்காக வெந்தய ரின்ஸ்
வெந்தயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது முடி இழைகளை வலுப்படுத்த உதவுகிறது. வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, அதை அரைத்து பேஸ்ட்டாக்கி (paste), தண்ணீருடன் கலந்து ரின்ஸாகப் பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் சுமார் 30 நிமிடங்கள் தடவி, ஷாம்பு போட்டு அலசி விடவும். தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால், முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உடைவதை குறைக்கலாம்.
குறிப்பு 5
ஆன்டிஆக்ஸிடன்ட் நன்மைக்காக கிரீன் டீ ரின்ஸ்
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து கூந்தலை பாதுகாப்பதோடு, DHT எனும் ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சிக்கும் உதவும். (DHT என்பது முடி உதிர்வுக்கு காரணமான ஒரு ஹார்மோன்). கிரீன் டீ பைகளை வெந்நீரில் ஊறவைத்து, அது ஆறியதும், ஷாம்பு போட்டு தலைமுடியை நன்றாக அலசிய பிறகு, கடைசியாக இந்த நீரால் தலைமுடியை அலசலாம்.