NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நல்ல ஆரோக்கியத்திற்காக இந்த கொய்யா அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நல்ல ஆரோக்கியத்திற்காக இந்த கொய்யா அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள்

    நல்ல ஆரோக்கியத்திற்காக இந்த கொய்யா அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2024
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    கொய்யா ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் சுவைக்காக மட்டுமல்ல, வைட்டமின் சி ஆற்றல் மையமாகவும் கொண்டாடப்படுகிறது.

    இந்த முக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த பழம், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதிலும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

    இந்த கட்டுரையில், கொய்யா முதன்மையான மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்ட ஐந்து சைவ உணவுகளை நாங்கள் ஆராய்வோம்.

    இதை சாப்பிடுவதால், உடலுக்கு கணிசமான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.

    காலை உணவு

    கொய்யா ஸ்மூத்தி

    புத்துணர்ச்சியூட்டும் கொய்யா ஸ்மூத்தியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

    பழுத்த கொய்யாப்பழங்கள், வாழைப்பழங்கள், நீங்கள் விரும்பும் தாவர அடிப்படையிலான பால் மற்றும் இனிப்புக்காக நீலக்கத்தாழை சிரப்பினை(agave syrup) சேர்த்து கலக்கவும்.

    கூடுதல் ருசிக்காகவும், கூடுதல் ஊட்டச்சத்து ஊக்கத்திற்காகவும் உங்களுக்கு பிடித்த நட்ஸ் மற்றும் விதைகளை அதோடு சேர்க்கவும்.

    இந்த ஸ்மூத்தி வைட்டமின் சி நிறைந்தது மட்டுமல்ல, நார்ச்சத்தும் நிரம்பியுள்ளது. இது காலை உணவுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

    சாலட்

    கொய்யா சாலட்

    சத்தான கொய்யா சாலட் டிரஸ்ஸிங் மூலம் உங்கள் இடைவேளை பொழுதை கழியுங்கள்.

    புதிய கொய்யாப்பழத்தின் சதையை கூழாக்கி, அதன் மேல் எலுமிச்சை சாரை பிழிந்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பூண்டு சேர்த்து, ஆலிவ் எண்ணெயைத் தூவினால், இந்த புளிப்பான சாலட் ட்ரெஸ்ஸிங் தயார்.

    கொய்யாப்பழத்தின் தனித்துவமான இனிப்பு சுவையை அனுபவிக்கும் அதே வேளையில் வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிக்க இது எளிதான வழியாகும்.

    இந்த கலவையை, நீங்கள் தயார் செய்யும் காய்கறி சாலட்டில் கலந்து உண்பதால், சுவை கூடுதலாகும்.

    சூப்

    பசியை தூண்டும் கொய்யா சூப்

    பசியை தூண்ட, சூப்பரான குளிர்ந்த கொய்யா சூப்பைத் தேர்வு செய்யவும்.

    பழுத்த கொய்யாப்பழங்களை, மிருதுவான வெள்ளரி மற்றும் புதிய புதினா இலைகளுடன் அரைத்து, நீரேற்றத்திற்கு இளநீரை சேர்க்கவும்.

    இந்த சூப்பை, வெயில் நாட்களில் குளிர்ச்சியாக பரிமாறுவது சிறந்தது.

    இது நீரேற்றத்தின் புத்துணர்ச்சியை வழங்குகிறது. கொய்யாப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

    இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    இனிப்பு

    உறைந்த கொய்யா ஸ்வீட் பார்

    இனிப்பு பிரியர்களுக்கு, பழுத்த கொய்யாப்பழங்களை தேங்காய் க்ரீமுடன் கலந்து, அச்சுகளில் ஊற்றி உறைய வைக்கவும்.

    இந்த உறைந்த கொய்யா இனிப்பு பார்கள் சூடான நாட்களுக்கு ஏற்றது. வைட்டமின் சி நன்மைகளை அனுபவிக்க ஒரு சுவையான வழியை வழங்குகிறது.

    தேங்காய் க்ரீமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை உடன் சேர்ப்பதால், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நன்மை பயக்கும் ஒரு சிறந்த இன்பத்தை உருவாக்குகின்றன.

    ஸ்னாக்ஸ்

    சுட்ட கொய்யா சிப்ஸ்

    மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ் சாப்பிட ஆசையாக இருந்தால், பேக்ட் கொய்யா சிப்ஸ் செய்யவும்.

    கொய்யாவை மெல்லியதாக நறுக்கி, மொறுமொறுப்பாக பேக் செய்யவும் பழத்தின் இயற்கையான இனிப்புக்கு ஒரு சூடான சுவையை சேர்க்க, சுடுவதற்கு முன் இலவங்கப்பட்டை தூளை தெளிக்கவும்.

    இந்த சிப்ஸ்கள் சுவையானவை மட்டுமல்ல; அவை நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றால் நிறைந்துள்ளன.

    அவை சுவை மற்றும் ஆரோக்கியத் தேவைகள் இரண்டையும் பூர்த்தி செய்யும் சத்தான சிற்றுண்டித் தேர்வாக அமைகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கியமான உணவுகள்
    ஆரோக்கிய குறிப்புகள்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை பிரதமர் மோடி
    OpenAI செயலிழப்பு: ChatGPT செயலிழப்பு, மொபைல் மற்றும் வலை சேவைகள் பாதிக்கப்பட்டன ஓபன்ஏஐ
    'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஜூன் 2025க்குள் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் இயங்காது என அறிவிப்பு; காரணம் என்ன? நெட்ஃபிலிக்ஸ்

    ஆரோக்கியமான உணவு

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம்
    உங்கள் காலை உணவை மேம்படுத்தும் விதைகள்  உணவுக் குறிப்புகள்
    உங்கள் வீட்டு செல்ல நாய்க்கு தரக்கூடிய பழங்கள் ஆரோக்கியம்
    உப்பில் இத்தனை வகைகளா? அவற்றின் பயன்பாடுகள் என்ன? உணவு குறிப்புகள்

    ஆரோக்கியமான உணவுகள்

    மேக்டொனல்ட்ஸ் ஸ்டைல் பிரட் பீட்சா பாக்கெட் செய்வது எப்படி? குழந்தைகள் உணவு
    ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி ஆரோக்கியம்
    உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவங்கள் என்ன ?  இந்தியா
    உங்கள் நுரையீரலை பாதுகாக்கும் சில காய்கறிகளும், பழங்களும்  ஆரோக்கியம்

    ஆரோக்கிய குறிப்புகள்

    2023 உடற்பயிற்சி ட்ரெண்ட்ஸ் : இந்தாண்டு வைரலாகிய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி டெக்னிக்குகள் உடற்பயிற்சி
    முடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள்  முடி பராமரிப்பு
    அதிகாலை சீக்கிரம் எழுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆரோக்கியம்
    இந்த வாழ்க்கை முறை குறிப்புகள் மூலம் உங்கள் 2024ஐ ஆரோக்கியமாக்குங்கள் ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    தினசரி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? உணவு குறிப்புகள்
    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகள் சுவாச பிரச்சனைகள்
    இரும்பு சத்து அதிகம் உள்ள ஆரோக்கிய உணவுகள் எவை எனத்தெரியுமா? உணவு குறிப்புகள்
    குழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா? குழந்தை பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025