இந்த தீபாவளிக்கு பட்ஜெட் விலையில் கொடுக்கும் வகையிலான கேட்ஜட் பரிசுகள்
செய்தி முன்னோட்டம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மகிழச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் பரிசுகளையும் அளிப்பது பலருடைய வழக்கமாக இருக்கும். இந்த தீபாவளிப் பண்டியையொட்டி என்ன பரிசு கொடுக்கலாம் எனக் கண்டிப்பாக பலரும் யோசித்திருப்பீர்கள்?
கேட்ஜட்கள் மயமான தற்போதைய நவீன உலகில் சிறிய பட்ஜெட் கேட்ஜட்களையே பரிசாக அளிக்கலாம். அப்படி பட்ஜெட் கேட்ஜட்கள் உங்களுடைய சாய்ஸ் என்றால் அதற்கான சில தேர்வுகள் இதோ.
வீகன் லெதர் டெஸ்க் மேட்:
வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் கலாச்சாரம் தற்போது அதிகரித்திருக்கும் நிலையில், வீட்டில் வேலை பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக்க டெஸ்க் மேட்டை பரிசாக அளிக்கலாம்.
இது வேலை பார்க்கும் இடத்தை ப்ரீமியமாக மாற்றுவதுடன், பல்வேறு கூடுதலான நன்மைகளையும் கொண்டிருக்கிறது. ரூ.1000 பட்ஜெட்டிற்குள்ளேயே இதனை நாம் வாங்க முடியும்.
கேட்ஜட்ஸ்
பவர் பேங்க்:
தற்போதைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் என்பது ஆடம்பரம் கிடையாது, அத்தியாவசியம். அப்படி இருக்கும் நிலையில், பவர் பேங்கை பரிசாக அளிப்பது நிச்சயம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
வெளியில் செல்லும் போது ஸ்மார்ட்போன் சார்ஜ் பற்றிய கவலைகளைக் குறைக்க ரூ.1000 பட்ஜெட்டிற்குள்ளேயே 10,000mAh பவர் கொண்ட பவர் பேங்கை பரிசாக அளிக்கலாம்.
ஸ்மார்ட் கேட்ஜட் க்ளீனிங் கிட்:
இன்று ஒரு நபரிடம் குறைந்த பட்சம் இரண்டு கேட்ஜட்களாவது இருக்கிறது. அந்த கேட்ஜட்களில் கறைபட்டால் அல்லது அவற்றில் இருக்கும் தூசியை சாதாரணமாக நீக்க முடிவதில்லை.
எனவே, இந்த கேட்ஜட் க்ளீனிங் கிட்டையும் பரிசீலனை செய்யலாம். அனைத்து விதமான கேட்ஜட்களையும் சுத்தமாக வைத்திருக்க ரூ.1000-த்திற்குள் சிறந்த பட்ஜெட் பரிசு இந்த க்ளீனிங் கிட்.
கேட்ஜட்ஸ்
வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ்:
முன்பு கூறியது போல் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பலருக்கும் மடிக்கணினியின் கீபோர்டு மற்றும் டிராக் பேடைப் பயன்படுத்துவது பெரும்பாலும் பிடிக்காது.
அப்படி இருக்கும் நம் பயன்பாட்டிற்காக அதற்கென தனியாக வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸை பரிசாக கொடுப்பது சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.1000 விலைக்குள் காம்போவாகவே இவை கிடைக்கின்றன.
நிலவு போன்ற இரவு விளக்கு:
இதனை ஒரு கேட்ஜட் எனக் கூற முடியாது. எனினும், பரிசாக கொடுப்பதற்கு ஏற்ற பொருள் தான். நம்மில் பலருக்கு இருள் மிகுந்த அறையில் தூக்கம் வராது. சிறிய வெளிச்சமாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி இருப்பவர்களுக்கு இந்த இரவு விளக்கை பரிசாக அளிக்கலாம். இந்த மின்விளக்கை ஆன் செய்தால் நிலவைப் போலான தோற்றத்தையே கொண்டிருக்கும்.