LOADING...
லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்
கொல்லப்பட்ட ஹைதராபாத் இளம்பெண் தேஜஸ்வினி ரெட்டி (வலது); பிரேசில் நாட்டை சேர்ந்த கொலையாளி (இடது)

லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2023
10:28 am

செய்தி முன்னோட்டம்

ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண், லண்டனில் வேலை பார்த்து வந்தார். நேற்று ஒரு மர்ம கும்பலால், தேஜஸ்வினியும், அவரது தோழியும், குத்தி கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், கொலைக்கு சம்மந்தப்பட்ட மூவரை, லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன், தேஜஸ்வினி தங்கி இருந்த அதே அபார்ட்மெண்டில் வாசித்த பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞன். தேஜஸ்வினிக்கு, இங்கே ஹைதராபாத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும், அதற்காக லண்டனில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு வரவிருந்த நிலையில் இந்த துர்மரணம் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் வருத்ததுடன் கூறினர். அவரின் உடலை, லண்டனிலிருந்து விமானம் மூலம் கொண்டு வர, தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்