மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரினை மத்திய அரசு அறிவித்தது. திங்கட்கிழமை துவங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று மக்களவையில் நடைபெற்றது. இதன் முடிவில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 454 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 11 மணிநேர விவாத்திற்கு் பிறகு ஏகமனதாக இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Embed
https://x.com/thanthitv/status/1704910670632985042?s=46