Page Loader
மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்
இறந்த பெண்ணுக்கு 32-35 வயது இருக்கும் என்று கர்நாடகாவின் காவல் கண்காணிப்பாளர் (ரயில்வே) எஸ்.கே.சௌம்யலதா தெரிவித்தார்.

மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்

எழுதியவர் Sindhuja SM
Mar 14, 2023
04:50 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (SMVT) ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே இருந்த டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இறந்த பெண்ணுக்கு 32-35 வயது இருக்கும் என்று கர்நாடகாவின் காவல் கண்காணிப்பாளர் (ரயில்வே) எஸ்.கே.சௌம்யலதா தெரிவித்தார். இறந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என்றும் போலீஸார் கூறியுள்ளனர். இதே போன்ற இரு சம்பவங்கள் பெங்களூரில் ஏற்கனவே நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதே போன்ற ஒரு சம்பவம் SMVT ரயில் நிலையத்தில் நடந்தது.

இந்தியா

பெங்களூரில் நடந்து வரும் தொடர் கொலைகள்

2022ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாவது வாரத்தில், SMVT ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்ற சாமான்களுடன் கிடந்த சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பயணி ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, மிகவும் சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 2023, ஜனவரி 4 அன்று, பெங்களூர் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண்-1இல் நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் இளம் பெண்ணின் அழுகிய உடலை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தனர்.. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த மூன்று சம்பவங்களும் தொடர்புடையதா என்பதை கூற அவர்கள் மறுத்துவிட்டனர்.