
கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' என்ற உணவை சாப்பிட்டதில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், 187 உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று முன்தினம் உணவருந்திய சுமார் 187 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த உணவகத்தில் பரிமாறாடும் 'குழிமந்தி' எனப்படும் உணவுடன் வழங்கப்பட்ட கெட்டுப்போன மயோனைஸை சாப்பிட்டதே, பாதிப்பிற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட உணவகத்துக்கு சீல் வைத்துள்ளனர். தற்போது பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, உணவாக உரிமையாளர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
embed
மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்
#JustNow | கேரளா: திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!#SunNews | #Kerala | #FoodPoisoning | #Trissur pic.twitter.com/lxgOt2ENqK— Sun News (@sunnewstamil) May 28, 2024