Page Loader
முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி 
நாளை முதல் இந்திய சட்டமன்றம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற உள்ளது.

முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Sep 18, 2023
01:07 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க 'விதியுடன் ஒரு முயற்சி' உரையின் எதிரொலி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதற்கு பிறகு, பழைய நாடாளுமன்ற கட்டிடம் கடந்து வந்த 75 ஆண்டுகால வரலாறு குறித்து பேசி கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி இதை கூறினார். நாளை முதல் இந்திய சட்டமன்றம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற உள்ளது. இந்நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் கடைசி அமர்வை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அந்த கட்டிடத்தின் வரலாறு குறித்து பேசினார்.

ட்னவ்

இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று முன்னாள் பிரதமர் நேரு ஆற்றிய உரை 

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய நாட்டின் முதல் பிரதமர் நேரு, "நள்ளிரவில் உலகம் உறங்கும் வேளையில், இந்தியா சுதந்திரத்துடன் விழித்துக் கொள்ளும்" என்று கூறினார். நேருவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க உரையை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்தார். "நேரு ஜியின் நள்ளிரவு உரையின் எதிரொலி நமக்கு உத்வேகத்தை அளிக்கும். இந்த அவையில்தான் அடல் பிஹாரி வாஜ்பாய் 'அரசுகள் வரும், போகும், ஆனால் இந்த நாடு நிலைத்திருக்கும்' என்று கூறினார்" என பிரதமர் மோடி இன்று தனது உரையின் போது நேரு மற்றும் வாஜ்பாய் குறித்து உயர்வாக பேசினார். ராஜேந்திர பிரசாத், ராம் நாத் கோவிந்த், திரௌபதி முர்மு ஆகிய இந்திய ஜனாதிபதிகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.