Loading...
மெர்கேட்டர் வரைபடம் காட்டும் பொய்! உலக வரைபடத்தில் இந்தியா சிறியதாகத் தெரிவது ஏன்? முழு பின்னணி
உலக வரைபடத்தில் இந்தியா சிறியதாக காட்சி அளிப்பதற்கான காரணம்

மெர்கேட்டர் வரைபடம் காட்டும் பொய்! உலக வரைபடத்தில் இந்தியா சிறியதாகத் தெரிவது ஏன்? முழு பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2026
06:01 pm

செய்தி முன்னோட்டம்

நாம் சிறுவயது முதல் பள்ளிகளிலும் புத்தகங்களிலும் பார்த்து பழகிய உலக வரைபடம், நாடுகளின் உண்மையான அளவை அப்படியே காட்டுவதில்லை. தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் மெர்கேட்டர் வரைபட முறையானது துருவப் பகுதிகளுக்கு அருகில் உள்ள நாடுகளை மிகப்பெரியதாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதி நாடுகளை சிறியதாகவும் காட்டுகிறது. இதனாலேயே உலக வரைபடத்தில் இந்தியா அதன் உண்மையான அளவை விட சற்றே சிறியதாகக் காட்சி அளிக்கிறது. இந்த நிலப்பரப்பு முரண்பாடுகளை சரிசெய்ய ஐக்கிய நாடுகள் சபை புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

வரைபட பின்னணி

மெர்கேட்டர் வரைபட முறையின் பின்னணியும் அதில் உள்ள குறைபாடுகளும்

கடந்த 1569 ஆம் ஆண்டு கெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் மாலுமிகளின் கடல் பயண வழிகாட்டலுக்காக இந்த மெர்கேட்டர் வரைபடம் உருவாக்கப்பட்டது.

திசைகளை நேர்கோட்டில் துல்லியமாகக் காட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதனால் உருண்டையான பூமியைத் தட்டையான வரைபடமாக மாற்றும்போது, வட மற்றும் தென் துருவப் பகுதி நிலப்பரப்புகள் அளவுக்கு அதிகமாக விரிவடைந்து காட்டப்படுகின்றன.

உதாரணத்திற்கு, ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்து, இந்த வரைபடத்தில் ஆப்பிரிக்காவிற்கு சமமான அளவில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.

ஈக்வல் எர்த் வரைபட முறை

ஈக்வல் எர்த் வரைபட முறையின் வருகையும் இந்தியாவின் நிலையும்

இந்த அளவீட்டுப் பிழைகளை சரிசெய்வதற்காக கார்ட்டோகிராஃபர்கள் 2018 ஆம் ஆண்டு ஈக்வல் எர்த் என்ற புதிய வரைபட முறையை உருவாக்கினர்.

இந்த வரைபடத்தில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் உண்மையான நிலப்பரப்பு துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.

இந்த புதிய வரைபட அமைப்பில் பார்க்கும்போது இந்தியாவின் பரப்பளவு பழைய வரைபடத்தை விடப் பெரிதாகவும், அதன் உண்மையான நிலப்பரப்பு அளவிற்குப் பொருந்துமாறும் தெளிவாகக் காட்சி அளிக்கிறது.

ADVERTISEMENT

மாற்றங்கள்

பூமியை தட்டையாக மாற்றும்போது ஏற்படும் தவிர்க்க முடியாத மாற்றங்கள்

உருண்டையான வடிவத்தைக் கொண்ட பூமியை எவ்வித மாற்றமும் இன்றி தட்டையான காகிதத்தில் வரைபடாமாகக் கொண்டுவருவது கணிதவியல் ரீதியாகச் சாத்தியமில்லை.

மெர்கேட்டர் வரைபடம் திசைகளைச் சரியாகக் காட்டினாலும் அளவுகளை மாற்றுகிறது.

அதேபோல ஈக்வல் எர்த் மற்றும் பீட்டர்ஸ் வரைபடங்கள் பரப்பளவை சரியாகக் காட்டினாலும் வடிவங்களை சற்றே மாற்றுகின்றன.

எனவே உலகில் எந்தவொரு தனிப்பட்ட வரைபடமும் 100 சதவீதம் அனைத்து அம்சங்களையும் துல்லியமாக உள்ளவாறே காட்ட முடியாது என்பதே அறிவியல் உண்மையாகும்.

ADVERTISEMENT