உலகின் மிகப்பெரிய சுகாதார சேவை; இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளியன்று (ஆகஸ்ட் 18) சுகாதார பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேம்படுத்தியதற்காக இந்தியாவை பாராட்டினார். குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வரும் ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் டெட்ரோஸ் இதனை தெரிவித்தார். தனது உரையின் தொடக்கத்தில், டாக்டர் டெட்ரோஸ், ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா அளித்த விருந்தோம்பல் மற்றும் தொலைநோக்கு தலைமைக்கு நன்றி தெரிவித்தார். "யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் மற்றும் உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத முயற்சியான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முன்னேற்றுவதில் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் டிஜிட்டல் ஹெல்த் முயற்சியையும் பாராட்டிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
முன்னதாக, குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஒரு சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்திற்கு தான் சென்றதையும் நினைவு கூர்ந்தார் மற்றும் அங்கு வழங்கப்படும் சேவைகளைப் பாராட்டினார். மேலும் குஜராத்தில் வழங்கப்பட்ட டெலிமெடிசின் வசதிகளையும் அவர் பாராட்டினார் மற்றும் சனிக்கிழமை தொடங்கப்படும் உலகளாவிய டிஜிட்டல் ஹெல்த் முன்முயற்சிக்காக இந்தியாவின் ஜி20 தலையைக்கு நன்றி தெரிவித்தார். ஜி20 கூட்டமைப்பில் இந்தியாவின் தலைமையின் கீழ் நடந்து வரும் மூன்று நாள் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடக்கிறது. ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம் மற்றும் பக்க நிகழ்வுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.