டிஎன்பிஎஸ் சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது; எப்படி பதிவிறக்கம் செய்வது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஹால்டிக்கெட்டை, இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டின்பிஎஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளன. அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது." "விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் செய்யும் தளத்தின் மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.